சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை மெப்ஸ் – சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரூ.31 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அனுமதி

Posted On: 01 OCT 2024 12:39PM by PIB Chennai

 

சென்னை மெப்ஸ் – சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் தொழில் அனுமதி குழுவின் கூட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் வளர்ச்சி ஆணையர் திரு அலெக்ஸ் பால் மேனன் இ.ஆ.ப. தலைமையில் இன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில், மெப்ஸ் வளாகத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில் 29 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

முக்கிய அம்சங்கள்:

  • அனுமதிக்கப்பட்ட முதலீடுகள்: சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் மொத்தம் ரூ.31 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
  • வேலைவாய்ப்பு உருவாக்கம்: அனுமதி அளிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் 137 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இந்தப் பிராந்தியத்தின் வேலைவாய்ப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

மொத்த விளைவுகள் (ஏப்ரல் 2024 முதல் செப்டம்பர் 2024 வரை):

2024  ஏப்ரல் முதல் மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில் பிரிவுகளில், முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

  • அனுமதிக்கப்பட்ட மொத்த முதலீடுகள்: மொத்தம் ரூ.4,024 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • உருவாக்கப்பட்ட மொத்த வேலைவாய்ப்புகள்: அனுமதிக்கப்பட்ட இந்தப் புதிய திட்டங்கள் மூலம் 22,844 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதன் மூலம், இந்தப் பிராந்தியத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

   

***

MM/RR/KV


(Release ID: 2060560) Visitor Counter : 121
Read this release in: English