சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலக மருந்தாளுநர்கள் தினம் : சுகாதாரத்தில் மருந்தாளுநர்களின் முக்கிய பங்கைக் கொண்டாடுகிறது
Posted On:
27 SEP 2024 3:19PM by PIB Chennai
உலக மருந்தாளுநர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது, உலகளாவிய சுகாதாரத்திற்கு மருந்தாளுநர்கள் செய்யும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் இந்தத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடாந்திர நிகழ்வு உலக சுகாதார அமைப்பின் துணை அமைப்பான சர்வதேச மருந்து கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்படுகிறது, இது ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்குவதிலும், உலக அளவில் சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதிலும் மருந்தாளுநர்கள் வகிக்கும் இன்றியமையாத பங்கை அங்கீகரிக்கும் வகையில் கொண்டாடப்டுகிறது.
2024-ம் ஆண்டிற்கான கருப்பொருள், 'உலகளாவிய சுகாதாரத் தேவைகளை சந்தித்தல்' என்பதாகும். நோய்த் தடுப்பு, நோயாளிகளின் பராமரிப்பு, மருந்துகள் கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு சுகாதார சவால்களை எதிர்கொள்வதில் மருந்தாளுநர்கள் எவ்வாறு மையமாக உள்ளனர் என்பதை இந்தக் கருப்பொருள் எடுத்துரைக்கிறது.
சுகாதார அமைப்புகளில் மருந்தாளுநர்களின் முக்கியத்துவம், இந்தியாவில் உலக மருந்தாளுநர்கள் தினம் கொண்டாட்டங்கள், மருந்தாளுநர்களின் முக்கியப் பங்கு, பொதுவான மருந்துகள் குறித்த விழிப்புணர்வு, மருத்துவ மருந்தாளர் மற்றும் நோயாளிகளுக்கான ஆலோசனைகள், மருந்துகளின் உற்பத்தி நடைமுறைகள் போன்றவை குறித்த மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2059441
***
PLM/KPG/DL
(Release ID: 2059612)
Visitor Counter : 39