சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சிஎஸ்ஐஆர் சென்னை வளாகத்தில் நிறுவன தின கொண்டாட்டம்
प्रविष्टि तिथि:
26 SEP 2024 6:36PM by PIB Chennai
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான, புதுதில்லியில் உள்ள அறிவியல் - தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின் (CSIR), நிறுவன தினம், சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் வளாகத்தில் கொண்டாடப்பட்டது. சிஎஸ்ஐஆர்- கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையமும், சிஎஸ்ஐஆர் சென்னை வளாகமும் இணைந்து இன்று (26.09.2024) இதனை கொண்டாடின.
சிஎஸ்ஐஆர் நிறுவன தினத்தினை முன்னிட்டு சி எஸ் ஐ ஆர் – கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் சி எஸ் ஐ ஆர் சென்னை வளாகத்தில் உள்ள CSIR-CECRI, CSIR-CEERI, CSIR-CSIO, CSIR-NEERI மற்றும் CSIR-NML ஆகிய அனைத்து ஆய்வகங்களும், சென்னை திரிசூலத்தில் அமைந்துள்ள கோபுர வடிவ கட்டுமானங்களின் சோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையமும் பார்வையாளர்கள் தினம் மற்றும் அறிவியலை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் தினம் ஆகியவற்றை கடைப்பிடித்தன.
சிஎஸ்ஐஆர் வளாகத்தில் உள்ள அனைத்து ஆய்வகங்களும் மற்றும் TTRS-ம் பொது மக்களுக்கு காலை 9.30 முதல் பிற்பகல் 3:00 மணி வரை திறந்திருந்து பார்வையாளர்களை வரவேற்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தொழில்நுட்பங்கள், உற்பத்திப் பொருட்கள் மற்றும் உன்னத வசதிகள், பார்வையாளர்களின் நன்மைக்காக காட்சிப்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் உட்பட 9200-க்கும் அதிகமானோர் இந்த வளாகத்தை மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். அவர்கள் ஆய்வுகூடங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்கிய பன்முக ஆராய்ச்சி மேம்பாட்டு திட்டங்களை நேரில் கண்டு, விஞ்ஞானி மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுடன் ஆர்வத்துடன் கலந்துரையாடினர்.



***
PKV/AG/DL
(रिलीज़ आईडी: 2059156)
आगंतुक पटल : 82
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English