வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பாபா ராம்தேவ் நகர் பெண்கள் துப்புரவு பொறுப்பில் முன்னிலையில் உள்ளனர்
தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம் உள்ளூர் தலைவர்கள் சுகாதாரத்தை மேம்படுத்துகிறார்கள்
Posted On:
26 SEP 2024 12:00PM by PIB Chennai
ஜெய்பூரின் பரபரப்பான பாபா ராம்தேவ் நகர் குடிஇருப்பில், பெண் தலைவர்களின் குழு சுகாதாரத்தின் மீது கவனத்தைத் திருப்பி, உண்மையான மாற்றம் அடிமட்டத்தில் இருந்து தொடங்குகிறது என்பதை நிரூபித்துள்ளது. பல ஆண்டுகளாக, நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் இந்தக் குடியிருப்பு, போதுமான சுகாதார சேவைகள் இல்லாமல் போராடி வந்தது. கழிவுநீர் இணைப்புகள் இல்லாமை, மோசமாக நிர்வகிக்கப்படும் சமூக கழிப்பறைகள் ஆகியவற்றால், குறிப்பாக பெண்கள் இந்த சவால்களின் சுமைகளை சுமந்தனர். மஞ்சு ராணா, சஞ்சு ராணா, சட்டன் பேகம் மற்றும் பிற பெண்கள் ஒரு துப்புரவுப் புரட்சியைத் தாங்களே வழிநடத்தத் தொடங்கியபோது அனைத்தும் மாறத் தொடங்கின.
மீனவப் பெண்கள், குப்பை சேகரிப்போர், இல்லத்தரசிகள் போன்ற பல்வேறு பின்னணியைக் கொண்ட இந்தப் பெண்கள், சமூக மேலாண்மைக் குழு, ஒற்றைச் சாளர மன்றம் ஆகியவற்றை உருவாக்கினர். அவர்கள் தங்கள் சமூகத்தில் விளிம்புநிலை மக்களுக்காக குரல் கொடுக்க உறுதியாக இருந்தனர். அவர்களின் முதல் பணி, துப்புரவு நடவடிக்கைகள் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் பற்றிய வழிகாட்டுதல்கள் குறித்து முறையான பயிற்சியைப் பெறுவதாகும். இந்த அறிவைக் கொண்டு, சமூகத்தை ஈடுபடுத்துவது, ஆதாரங்களைச் சேகரிப்பது, ஒரு நிலையான துப்புரவு மாதிரியை இணைந்து உருவாக்குவது ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு திட்டத்தை அவர்கள் வகுத்தனர்.
இந்தப் பெண் தலைவர்கள் சிறந்த சுகாதாரத்தை நோக்கிய மாபெரும் தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். இது தூய்மை இந்தியா இயக்கத்தின் 10 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தொடங்கப்பட்ட இயற்கையான தூய்மை சடங்கான தூய்மை என்ற (4எஸ்) பிரச்சாரத்தால் எடுத்துக்காட்டப்பட்டது. செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2, 2024 வரை நடைபெறும், இந்தப் பிரச்சாரம் வருடாந்தர தூய்மையே சேவை என்ற முயற்சியுடன் ஒத்துப்போகிறது. இது மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று தூய்மை இந்தியா தினத்தில் நிறைவடைகிறது. 4எஸ் பிரச்சாரம் தூய்மை இயக்கத்திற்கு அப்பாற்பட்டது; இது பாபா ராம்தேவ் நகரின் பெண்கள் செய்த பணிகளுடன் எதிரொலிக்கும் கோட்பாடுகளான உரிமை, நிலைத்தன்மை, சுகாதாரத்தின் மூலம் கண்ணியம் ஆகியவற்றின் முக்கிய மதிப்புகளை உள்ளடக்கியது.
சமுதாய ஈடுபாடு இல்லாமல், குறிப்பாக பெண்களின் பங்களிப்பு இல்லாமல் நீடித்த சுகாதாரத்தை அடைய முடியாது என்பதை இவர்களின் முயற்சிகள் காட்டியுள்ளன. பொறுப்பேற்றதன் மூலம், இந்தப் பெண்கள் தங்கள் குடியிருப்பின் சுகாதார அமைப்புகளை மட்டுமின்றி, சமூகம் பெண்களின் தலைமையை உணரும் விதத்தையும் வடிவமைத்துள்ளனர். இவர்களின் பணி சமூகங்களில் உள்ள மற்றவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. உள்ளூர்வாசிகள் முன்னிலை வகிக்கும்போது மாற்றம் சாத்தியம் என்பதை நிரூபிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2058895
***
SMB/AG/KV
(Release ID: 2059006)
Visitor Counter : 33