பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

7 வது தேசிய ஊட்டச்சத்து மாதம்: ஊட்டச்சத்து மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல்

Posted On: 26 SEP 2024 10:18AM by PIB Chennai

'ஊட்டச்சத்து மாதம் 2024' என்பது நாடு தழுவிய கொண்டாட்டமாகும்.  இது ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது. ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தூண்டுகிறது. இந்த ஆண்டு, ஊட்டச்சத்து மாதம் இயக்கத்தின் 7 வது கட்டத்தில் ரத்த சோகை தடுப்பு, வளர்ச்சி கண்காணிப்பு, நல்ல நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் பயனுள்ள சேவை வழங்குதல், துணை ஊட்டச்சத்து போன்ற முக்கியமான கருப்பொருள்களில் கவனம் செலுத்தப்படுகிறது. 2018 முதல், 6 ஊட்டச்சத்து மாதம் மற்றும் ஊட்டச்சத்து இருவார விழாக்கள்  நாடு முழுவதும் நடந்துள்ளன. தற்போது 7 வது தேசிய ஊட்டச்சத்து மாதம் நடந்து வருகிறது. பல்வேறு கருப்பொருள்களின் கீழ் இந்த விழிப்புணர்வு இயக்கங்களின்போது ஊட்டச்சத்தினை  மையமாகக்கொண்ட  10 கோடிக்கும் அதிகமான உணர்திறன் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன.

நாடு முழுவதும் கொண்டாடப்படும்  7 வது தேசிய ஊட்டச்சத்து மாதம் 2024, ஊட்டச்சத்து பற்றிய உரையாடலுக்குப் புதிய ஆற்றலைக் கொண்டுவந்துள்ளது. மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை  அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, குஜராத் முதலமைச்சர் திரு  பூபேந்திரபாய் படேல் ஆகியோரால் குஜராத்தின் காந்திநகரில் தொடங்கப்பட்ட இந்த ஒரு மாத கால இயக்கம், ஊட்டச்சத்து குறைபாட்டைப்  போக்குவதற்கான இந்திய இயக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் ஊட்டச்சத்துக்கும் இடையிலான தொடர்பினை அடையாளபடுத்தும்  "தாயின் பெயரில் ஒரு மரக்கன்று " என்ற  இயக்கத்துடன் விழா தொடங்கியது.

ரத்த சோகை இல்லாத இந்தியா: 6x6x6 உத்தி (ஆறு வயது குழுக்கள், ஆறு தலையீடுகள், ஆறு நிறுவன வழிமுறைகள்) மூலம் ரத்த சோகையைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த முயற்சி நாடு முழுவதும் தாய் மற்றும் குழந்தையின் சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2024, ஆகஸ்ட்  நிலவரப்படி, இந்தியாவில் 95% கருவுற்றப் பெண்களுக்கும், 65.9% பாலூட்டும் தாய்மார்களுக்கும் ரத்த சோகையை எதிர்த்துப் போராட 180 இரும்பு மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள்: 10 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு நிகழ்நேர ஊட்டச்சத்து விநியோகத்தை கண்காணிக்கவும் மேம்படுத்தவும் போஷன் டிராக்கர் (ஊட்டச்சத்து தடமறிதல்) போன்ற டிஜிட்டல் தளங்களை மேம்படுத்துதல்.

தீவிர மக்கள் இயக்கம்: ஒவ்வொரு வீட்டிலும் ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஊக்குவிக்க சமூகம் தலைமையிலான நடவடிக்கைகள்.

இந்த ஆண்டு கருப்பொருளில் குழந்தைகளின் ஊட்டச்சத்தின் முக்கிய அம்சமான இணை உணவும் அடங்கும். 6 மாதக் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதை விட  ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்கான தேவை அதிகமாக இருக்கும். அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இணை உணவுகள் அவசியம். இந்த வயதில் ஒரு குழந்தை தாய்ப்பால் தவிர மற்ற உணவுகளுக்கும் தயாராக உள்ளது. இணை உணவளிக்கும் காலத்தில், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டின் அதிக ஆபத்தில் உள்ளனர். எனவே, தொடங்கும் காலம் , ஊட்டச்சத்தின் தரம், இணை உணவின் அளவு, எத்தனை முறை இணைத்து உணவளிக்கப்படுகிறது என்பது குறித்து சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.

ஊட்டச்சத்து மாதத்தின் தாக்கம்

7 வது தேசிய  ஊட்டச்சத்து மாதம்  இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத பங்கேற்பைக் கண்டுள்ளது. இது ஊட்டச்சத்து விளைவுகளை, குறிப்பாக குழந்தைகள், இளம் சிறார்கள், பெண்களுக்கான ஊட்டச்சத்து விளைவுகளை, மேம்படுத்த நாட்டின் வலுவான உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது. நாடு முழுவதும் 9.22 கோடிக்கும் அதிகமான செயல்பாடுகளுடன், அடித்தள நிலையில்  ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் தலையீடுகளை ஏற்படுத்த  சமூகங்கள், அரசு முகமைகள்  மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஈடுபடுத்துவதன் மூலம் ஊட்டச்சத்து மாதம் 2024  உண்மையில்  மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

ஊட்டச்சத்து மாதம் 2024-ல் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள்

மகாராஷ்டிரா: குறிப்பிடத்தக்க வகையில்  1.80 கோடி நடவடிக்கைகளுக்கு  ஏற்பாடு செய்து முன்னிலையில் உள்ளது .

பீகார்: அடுத்ததாக, பீகார் 1.17 கோடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

மத்தியப் பிரதேசம்: 79.32 லட்சம் செயல்பாடுகளுடன், சமூகங்களை சென்றடைவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் 70.28 லட்சம் நடவடிக்கைகள் மூலம்  அதிக அளவிலான மக்களைத்  தீவிரமாக ஈடுபடுத்தியது.

குஜராத்: குஜராத்தும் 66.76 லட்சம் செயல்பாடுகளுடன் பட்டியலில் இணைந்துள்ளது.

கூடுதலாக, ஆந்திரப் பிரதேசம் 65.54 லட்சம் நடவடிக்கைகளுடன் குறிப்பிடத்தக்க பங்களிப்பய்ச் செய்துள்ளது.

 இது ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் நடைமுறைகளை மேம்படுத்த நாடு தழுவிய முயற்சிகளை மேலும் வலுப்படுத்துகிறது.

ஊட்டச்சத்து மாதத்தின் அர்ப்பணிப்புக்கும் கூடுதலாக, போஷன் அபியான் என்பது  ஊட்டச்சத்து மிக்க  பாரதத்தை நோக்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன் தொடர்கிறது. இது 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 781 மாவட்டங்களில் 13,99,484  அங்கன்வாடி மையங்களில் 13,33,561 அங்கன்வாடிப் பணியாளர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த மையங்கள் சிறந்த கண்காணிப்பை உறுதி செய்யும் 98.6% ஆதார் சரிபார்ப்புடன் 9.98 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு சேவை செய்கின்றன. 1,95,497 அங்கன்வாடி மையங்களுக்கு சொந்தக் கட்டடங்களும், 2,73,680 அங்கன்வாடி மையங்களில் பயன்படும்  கழிப்பறைகளும், 3,38,645 அங்கன்வாடி மையங்களுக்கு குடிநீர் வசதியும் உள்ளன.

போஷன் டிராக்கர் முன்முயற்சிக்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மின்-ஆளுமை 2024 (தங்கம்) க்கான தேசிய விருதை மும்பையில் (3.9.2024) நடந்த நிகழ்ச்சியில் பெற்றுள்ளது.  குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்பாட்டில்  நிகழ்நேர கண்காணிப்பையும்  மதிப்பீட்டையும்  செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை போஷன் டிராக்கர் உறுதி செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2058870

***

SMB/AG/KV



(Release ID: 2058959) Visitor Counter : 48