தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மோடி 3.0-ன் 100 நாட்கள்: மக்களுக்கு முன்னுரிமை என்ற அணுகுமுறையுடன் நிர்வாகம்

Posted On: 25 SEP 2024 1:52PM by PIB Chennai

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நல்லாட்சி அவசியம். வளமான இந்தியாவுக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க, வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான தொலைநோக்கு திட்டத்தின் கீழ் பல்வேறு முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லவும், வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும் முக்கிய சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு முழுமையான, அணுகுமுறை சமூக, பொருளாதார மற்றும் நீதித்துறை அதிகாரமளித்தலில் கவனம் செலுத்துகிறது.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், தேசிய தடயவியல் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், ஓய்வூதிய சீர்திருத்தங்கள், வருமான வரிச் சட்ட மறுஆய்வு, 15,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசு வேலைகளுக்கு நியமித்தல் போன்றவை 100 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சிகளில் சிலவாகும்.

பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுப்பது) சட்டம், 2024 ஜூன் 21, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. வினாதாள் கசிவுகள் மற்றும் பிற தவறான நடத்தைகளைத் தடுப்பதன் மூலம் தேர்வுகளின் நேர்மையை இச்சட்டம் உறுதி செய்கிறது,

பூர்வோதய முன்முயற்சி என்பது பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் கிழக்குப் பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாகும். இந்த விரிவான உத்தி மனிதவள மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார வாய்ப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

ஒரு முக்கிய முடிவாக 2024 ஆகஸ்ட் 26 அன்று லடாக் யூனியன் பிரதேசத்தில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது: ஜான்ஸ்கர், டிராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங். இந்த முயற்சி பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், பொது நலத்திட்டங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கும், லடாக் மக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் உள்ளூர்மயமாக்கப்பட்ட நிர்வாகத்தை செயல்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசன படுகொலை தினம் கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் தேதி அன்று இந்த தினத்தை அனுசரிக்க வழிவகுத்துள்ளது.

1975-ம் ஆண்டு அவசரநிலையின்போது மனிதாபிமானமற்ற வலிகளைத் தாங்கிய அனைவரின் மகத்தான பங்களிப்புகளை இந்த நாள் நினைவுகூரும்.

இரண்டு புவிசார் தளங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 2024 ஜூன் 28 அன்று கிராமப்புற நிலப் பதிவுக்கான 'புவன் பஞ்சாயத்து (Ver. 4.0)" தளம் மற்றும் "அவசரகால மேலாண்மைக்கான தேசிய தரவுத்தளம் (NDEMVer) ஆகிய இரண்டு புவிசார் தளங்களைத் தொடங்கி வைத்தார்.

வருமான வரிச் சட்டத்தின் விரிவான ஆய்வு:  2024-25 பட்ஜெட் உரையின் போது, வருமான வரிச் சட்டம்- 1961 குறித்த விரிவான மறுஆய்வை நிதியமைச்சர் அறிவித்தார். இது சட்டத்தை மிகவும் சுருக்கமாகவும், தெளிவாகவும், புரிந்துகொள்ள எளிதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. ஆறு மாதங்களுக்குள் மறுஆய்வு முடிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். இந்த அர்ப்பணிப்புக்கு ஏற்ப, இந்த பணி மிகுந்த விடாமுயற்சியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் தலைமை ஆணையர் தலைமையில் நாடு முழுவதும் உள்ள வருமான வரித்துறையின் பல்வேறு மண்டலங்கள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்காக, 15,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலைகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்குவது உட்பட கூடுதல் முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த முயற்சிகள் சமூக நலன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றிற்கான ஒரு விரிவான அணுகுமுறையை நிரூபிக்கின்றன. உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க இந்த முயற்சிகள் முக்கியமானவை. முன்னேற்றத்தின் பயன்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதற்கும் இவை முக்கியமானதாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/sep/doc2024925401601.pdf

 

***

(Release ID: 2058550)
PLM/RR/KR

 



(Release ID: 2058562) Visitor Counter : 21