சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

வணிக வளாகங்களில் திடக்கழிவு மேலாண்மை - தர நிர்ணயம் அமைவனம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம்

Posted On: 25 SEP 2024 12:40PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) சென்னை கிளை அலுவலகம், "கடைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் திடக்கழிவு மேலாண்மை - பிரித்தெடுத்தல்,சேகரிப்பு மற்றும் பயன்பாடு - வழிகாட்டுதல்கள்" தொடர்பான மானக் மந்தன் எனப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் இன்று 25.09.24 ஏற்பாடு செய்து நடத்தியது.

சென்னை கிளை அலுவலகத்தின் தலைவர் மற்றும் விஞ்ஞானி திருமதி ஜி.பவானி, சிறப்பு விருந்தினர்கள், பிரமுகர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை வரவேற்றார். அவர் தமது உரையில் கழிவுப் பிரிப்பு, முறையான சேகரிப்பு மற்றும் பாதுகாப்பான அகற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், அனைத்து வணிக நிலையங்களும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலையான நடைமுறைகளைப் பின்பற்ற முடியும் என்றார்.

திடக்கழிவு மேலாண்மை என்பது இந்தியாவில், குறிப்பாக நகர்ப்புற மற்றும் வணிக நிறுவனங்களில் முக்கியமான பிரச்சனையாகும் என்று அவர் குறிப்பிட்டார். பயனுள்ள கழிவு மேலாண்மை நடைமுறைகள் , கழிவுகளைப் பிரித்து, திறமையாக சேகரித்து, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் பதப்படுத்துதல் அல்லது மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றிக்கு வழிவகை செய்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர், திரு. சக்தி மணிகண்டன், நிகழ்ச்சியில் பேசுகையில், தொழில்துறையினரின் நலனுக்காக "மானக் மந்தன்" என்ற தலைப்பில் தொடர்ச்சியான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை பிஐஎஸ் ஏற்பாடு செய்து வருகிறது எனவும் இது புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்த உதவுகிறது என்றும் கூறினார்.

 சென்னை மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் திரு விஜயகுமார் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். பிஐஎஸ் விஞ்ஞானிகள் திரு எம். அருண் குமார், திரு கௌதம் உள்ளிட்டோர் பிஐஎஸ்-சின் முயற்சிகள் பற்றி விளக்கினார். நிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

***

PLM/RR/KR


(Release ID: 2058517) Visitor Counter : 53
Read this release in: English