தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மோடி 3.0 அரசின் 100 நாட்கள் – மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகள்
Posted On:
23 SEP 2024 11:14AM by PIB Chennai
சமூக நலனுக்கான மத்திய அரசின் உறுதியான அர்ப்பணிப்பு, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஈடுபாட்டை பிரதிபலிக்கிறது. வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி, சமூக நீதியை நிலைநாட்டுதல் போன்றவற்றுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்ட பரந்த அளவிலான முயற்சிகளுடன், பின்தங்கிய சமூகங்களை மேம்படுத்துவதற்கு முதல் 100 நாட்களில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. பல்வேறு சமூக-பொருளாதார குழுக்களுக்கிடையேயான இடைவெளியைக் குறைக்க முயற்சிக்கும் பல்வேறு திட்டங்கள், கொள்கைகள் மூலம் இந்த உறுதிப்பாடு தெளிவாகிறது,
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பழங்குடி சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக 79,156 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில் (மத்திய பங்கு: ரூ.56,333 கோடி மற்றும் மாநில பங்கு: ரூ.22,823 கோடி) பிரதமரின் ஜன்ஜாதியா உன்னத் கிராம் அபியான் திட்டத்திற்கு 2024 செப்டம்பரில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது 2024-25 பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டபடி 5 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும். சுமார் 63,000 கிராமங்களை உள்ளடக்கும். இது 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 549 மாவட்டங்கள் மற்றும் 2,740 வட்டாரங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த இயக்கம் 25 அம்சங்களை உள்ளடக்கியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/sep/doc2024923399501.pdf
***
PLM/RS/KR
(Release ID: 2057897)
Visitor Counter : 44