சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்திய தரநிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி திட்டத்தை நடத்துகிறது

Posted On: 20 SEP 2024 6:15PM by PIB Chennai

இந்திய தரநிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), மதுரை, 2024 செப்டம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் விருதுநகரில் பிஐஎஸ் ஸ்டாண்டர்ட்ஸ் கிளப்களின் அறிவியல் ஆசிரியர்களுக்கான தரநிலைகள் வழியாக அறிவியலைக் கற்றல் குறித்த பயிற்சி முகாமை நடத்தியது. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 49 அறிவியல் ஆசிரியர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

மதுரை பிஐஎஸ் மூத்த இயக்குநர் திரு சு..தயானந்த், நிகழ்ச்சி நோக்கங்களை வழங்கினார். பயிற்சியின் முதல் நாளில், பிஐஎஸ் முக்கிய செயல்பாடுகள், பிஐஎஸ் கேர் செயலியின் அம்சங்கள், தரநிலைகளுக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள், நோக்குநிலை விளக்கக்காட்சி, கல்வியாளர்களுடன் ஈடுபாடு தரம் மற்றும் தரநிலைகளை மேம்படுத்துவதில் அறிவியல் ஆசிரியர்களின் பங்கு மற்றும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் சிமெண்ட், காஸ்டிக் சோடா, LPG கேஸ் ஸ்டவ், ஹீட்டர் மற்றும் பிரஷர் குக்கர் தொடர்பான பாடத்திட்டங்களில் அறிவியலின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.

இரண்டாவது நாளில், பங்கேற்பாளர்கள் விருதுநகரில் உள்ள தி ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையைப் பார்வையிட்டனர். அங்கு அவர்கள் உற்பத்தி, சோதனை நடைமுறைகள் மற்றும் தயாரிப்பு சோதனையின் பின்னணியில் உள்ள அறிவியல் கோட்பாடுகள் பற்றிய செயல்விளக்கங்களைக் கற்றறிந்தனர். பிளாஸ்டிக் ஃபீடிங் பாட்டில், ப்ளைன் காப்பியர் பேப்பர், அயோடின் உப்பு, போட்டபிள் வாட்டர் பாட்டில் போன்ற பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்த விளக்கக்காட்சியை பங்கேற்பாளர்கள் வழங்கினர். நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 

***

PKV/RR/KV



(Release ID: 2057116) Visitor Counter : 42


Read this release in: English