சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி லட்சக்கணக்கான காதி கைவினைஞர்களுக்கு கேவிஐசி வழங்கும் பரிசுகள்

Posted On: 20 SEP 2024 1:12PM by PIB Chennai

கதர் கிராம தொழில் வாரிய தலைவர் திரு மனோஜ் குமாரின் அறிவிப்பு; அக்டோபர் 2, 2024 முதல், நூற்போர்களின் ஊதியம் 25 சதவீதமும், நெசவாளர்களின் ஊதியம் 7 சதவீதமும் அதிகரிப்பு.

கதர் கிராம தொழில் வாரிய ‘இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்' தொடங்கப்பட்டு, பதிவு தொடங்கியது.

தில்லி விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவு ராட்டையைப் போன்று, போர்பந்தரில் உள்ள அஸ்மாவதி ஆற்றங்கரையில் நினைவு ராட்டையை கதர் கிராம தொழில் வாரியம் வெளியிட்டது.

நாடு முழுவதும் உள்ள 3,911 PMEGP திட்ட பயனாளிகளின் கணக்குகளுக்கு ரூ.101 கோடி மானியத் தொகை விநியோகிக்கப்பட்டு; புதிதாக 43,021 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

கதர் கிராம தொழில் வாரிய தலைவர் காணொலி காட்சி வாயிலாக PMEGP இன் 1100 புதிய தொழிற்கூடங்களை திறந்து வைத்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் பிறந்தநாள் மற்றும் மோடி அரசு 3.0 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு மனோஜ் குமார், லட்சக்கணக்கான காதி கைவினைஞர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கினார். பூஜ்யபாபுஜியின் பிறந்த இடமான போர்பந்தரில் உள்ள அஸ்மாவதி ஆற்றங்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கைவினைஞர்களான நூற்போர்களின் ஊதியத்தில் 25 சதவீதமும், நெசவாளர்களின் ஊதியத்தில் 7 சதவீதமும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாளான 2024 அக்டோபர் 2 முதல் உயர்த்தப்பட்ட ஊதியம் அமலுக்கு வரும். இதன்போது, ​​அஸ்மாவதி ஆற்றங்கரையில் நிறுவப்பட்டுள்ள 26 அடி நீளமும், 13 அடி அகலமும் கொண்ட துருப்பிடிக்காத எஃகு `நினைவு ராட்டை’ திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது, ​​ KVIC யின் தலைவர், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் 3911 பயனாளிகளின் கணக்குகளில் 101 கோடி ரூபாய் மானியத் தொகையை விடுவித்ததுடன் காணொலி காட்சி வாயிலாக 1100 புதிய PMEGP தொழிற்கூடங்களையும் திறந்து வைத்தார்

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மனோஜ் குமார், தனது பதவிக்காலத்தில் நூற்போர்கள் மற்றும் நெசவாளர்களின் ஊதியம் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார். ஏப்ரல் 1, 2023 முதல் ஒரு சிட்டத்திற்கு ரூபாய் 7.50 இருந்து ரூபாய் 10 ஆக பெற்று வந்த நூற்போர்களின் ஊதிய உயர்வு ஆனது அக்டோபர் 2, 2024 முதல் ஒரு சிட்டத்திற்கு ரூபாய் 10-ல் இருந்து ரூபாய் 12.50 ஆக  உயர்த்தப்படுகிறது. மேலும் அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான 'காதிகிராந்தி' ஆனது நூற்போர் மற்றும் நெசவாளர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார். கடந்த நிதியாண்டில் காதி வர்த்தகம் ரூ.1.55 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. காதி குடும்ப கைவினைஞர்களுக்கு சலுகைகளை விரிவுபடுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, அவர்களின் ஊதியத்தை அதிகரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ஏறக்குறைய 3,000 பதிவு செய்யப்பட்ட காதி நிறுவனங்கள் உள்ளன, இதன் மூலம் 4.98 லட்சம் காதி கைவினைஞர்கள் பணிபுரிகின்றனர், இவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள். உயர்த்தப்பட்ட ஊதியம் அவர்களுக்குப் புதிய பொருளாதார வலிமையைக் கொடுக்கும். காதி மூலம் கிராமப்புற இந்தியா பொருளாதார ரீதியில் வலுப்பெறுகிறது என்பதன் அடையாளமாக மோடி ஆட்சியில் இதுவரை 213 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிகழ்வின் போது, ​​தில்லி சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவுச் சின்னமான ராட்டையின் வரிசையில், அஸ்மாவதி ஆற்றங்கரையில் துருப்பிடிக்காத எஃகு மூலம் செய்யப்பட்ட ராட்டையை KVIC-யின் தலைவர் வெளியிட்டார். முன்னதாக செப்டம்பர் 12-ம் தேதி, பிரதமர் திரு நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் இதேபோன்ற சர்க்கா வெளியிடப்பட்டது. KVIC-யின் தலைவர், திரு மனோஜ் குமார் தனது தலைமை உரையில், நினைவுச் சின்னத்தை நிறுவுவதன் மூலமாக KVIC-ன் நோக்கமான தேசத் தந்தை மகாத்மா காந்தியின் சிந்தனைகளுடன் புதிய தலைமுறையினரை  இணைப்பதும், காதியின் தேசிய பாரம்பரியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ஆகும். மேலும் அவர்,  'புதிய இந்தியாவின் புதிய காதி', ஆனது 'ஆத்மநிர்பர் பாரத் மற்றும் விகாசித் பாரத் பிரச்சாரத்திற்கு' புதிய திசையை வழங்கியுள்ளது என்று கூறினார். பூஜ்யபாபு பிறந்த இடத்தில் நிறுவப்பட்ட இந்த ராட்டை, தேசத் தந்தையின் பாரம்பரியத்தை புதிய தலைமுறைக்கு நினைவூட்டும்.

நிகழ்ச்சியின் போது, ​​PMEGP திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 3911 பயனாளிகளின் கணக்குகளில் ரூ.101 கோடி மதிப்புள்ள மானியத் தொகை விநியோகிக்கப்பட்டது. இதன் மூலம் 43,021 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனுடன், நாடு முழுவதும் நிறுவப்பட்ட 1100 புதிய PMEGP தொழிற்கூடங்களும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவரால் திறந்து வைக்கப்பட்டன. பயனாளிகளிடம் உரையாற்றிய KVIC யின் தலைவர். திரு மனோஜ் குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலும், எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் வழிகாட்டுதலிலும், நாட்டின் குடிசைத் தொழிலுக்கு புதிய ஆற்றலாகவும், சக்தியாகவும் PMEGP உருவெடுத்துள்ளது என்றார். இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 9.58 லட்சம் புதிய திட்டங்கள் மூலம் 83.48 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த காலகட்டத்தில், KVIC மூலமாக சுமார் ரூ. 24 ஆயிரம் கோடி மானியத் தொகை விநியோகிக்கப்பட்டது. மேலும் அவர், காதி மற்றும் கிராமத் தொழில்கள் மூலம் கடந்த நிதியாண்டில் 10.17 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், குஜராத்தில் உள்ள KVIC மாநில அலுவலகத்துடன் தொடர்புடைய காதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், காதி தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் KVIC அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

***

 


(Release ID: 2056938) Visitor Counter : 147


Read this release in: English