ஜவுளித்துறை அமைச்சகம்
இந்தியாவின் முதல் ஆடை வடிவமைப்பு முன்கணிப்பு முன்முயற்சி 'VisioNxt'
Posted On:
19 SEP 2024 3:11PM by PIB Chennai
‘விஷன்நெக்ஸ்ட்’ என்பது தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (என்ஐஎஃப்டி) முன்கணிப்பு முன்முயற்சியாகும். உலக அளவிலான ஆரோக்கியமான போட்டி, இந்தியக் கலாச்சாரம் மற்றும் வடிவமைப்பை உலக அளவில் உச்சத்திற்கு கொண்டு செல்லுதல் ஆகியவையே இதன் நோக்கமாகும். செயற்கை நுண்ணறிவு, உணர்வுபூர்வ நுண்ணறிவு ஆகியவற்றிலிருந்து வடிவமைப்புத் தொழில் பயனடையும்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் செப்டம்பர் 5-ந் தேதி விஷன்நெக்ஸ்ட் என்னும் இருமொழி இணையதளத்தை தொடங்கி வைத்தார். தற்கால உள்ளீடுகள், எதிர்காலத்திற்கான முன்முயற்சி ஆகியவற்றைக் கொண்ட விஷன்நெக்ஸ்ட் என்பது 2018-ம் ஆண்டு தில்லி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன் உருவாக்கியவையாகும். இந்த முன்முயற்சி தற்போது சென்னையில் மையப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு சில்லரை சந்தை ஆகியவற்றுக்கான தற்கால உள்ளீடுகள் மற்றும் எதிர்காலத்திற்கான வடிவமைப்புகளை நோக்கமாக கொண்டுள்ளது. பல்வேறு தற்கால போக்கு தொடர்பான ஆலோசனை சேவைகள், கல்வி படிப்புகள், பயிலரங்குகள் உள்ளிட்டவற்றை இது வழங்குகிறது.
விஷன்நெக்ஸ்ட் முன்முயற்சி ஆரோக்கியமான உலக அளவிலான போட்டி, இந்தியக் கலாச்சாரத்தை மேம்படுத்துதல், வடிவமைப்புகளை உலகளவில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல உதவும். இந்த முன்கணிப்பு பிரிவில் இந்தியா நுழைந்திருப்பது பல்வேறு பயன்களை வழங்கும். உலகளவிலான முன்கணிப்பு முகமைகளை நம்பியிருப்பதை இது குறைப்பதுடன் இந்திய வடிவமைப்பு நுகர்வோருக்கு தனித்துவமான உள்ளீடுகளை வழங்கும். தகவல் தொழில்நுட்பத்தை ஜவுளி மற்றும் செயற்கை நுண்ணறிவுகளுடன் இணைத்தலில் இந்தியாவின் வலிமையை ஒருங்கிணைக்கும். இந்த விஷன்நெக்ஸ்ட் தளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் உள்ளீடுகள் அமைந்திருக்கும். இது நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், உள்ளூர் வணிகர்கள், உள்நாட்டு வடிவமைப்பாளர்கள், வடிவமைப்பு முத்திரைகள் ஆகியோருக்கு ஆதரவளிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2056619
***
PKV/RR/KR
(Release ID: 2056684)
Visitor Counter : 62