மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
ரங்கீன் மச்லி செயலியின் சிறப்புகள்
Posted On:
17 SEP 2024 10:33AM by PIB Chennai
"ரங்கீன் மச்லி" செயலி எட்டு இந்திய மொழிகளில் பிரபலமான அலங்கார மீன் இனங்களைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இதனால், பரந்த அளவில் பார்வையாளர்களை இது சென்றடையும். பொழுதுபோக்கு ஆர்வலர்களுக்கு மீன் பராமரிப்பு குறித்த வழிகாட்டுதல்கள், விவசாயிகள் மீன் இனங்களை பன்முகப்படுத்துதல், மீன் இனப்பெருக்கம், பராமரிப்பு நடைமுறைகள் குறித்த விரிவான விவரங்களை இது வழங்குகிறது.
செயலியின் ஒரு தனித்துவமான அம்சம் Find Aquarium Shops எனப்படும் மீன் வளம் தொடர்பான கடைகளைக் கண்டுபிடித்தல் தொடர்பான அம்சமாகும். இது பயனர்கள் அருகிலுள்ள மீன் வளம் தொடர்பான கடைகளைக் கண்டறிய உதவுகிறது. இது உரிமையாளர்களால் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. இது உள்ளூர் வணிகங்களை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் அலங்கார மீன், மீன்வளம் தொடர்பான தயாரிப்புகளுக்கான நம்பகமான ஆதாரங்களை பயனர்களுக்கு இது வழங்குகிறது.
வழிகாட்டுதல் கல்வித் தொகுதி:
செயலியில் அலங்கார மீன் தொழிலில் புதியவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான வழிகாட்டுதல் கல்வி தொகுதிகள் உள்ளன.
செயலியை எவ்வாறு பயன்படுத்துவது?:
இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் Google Play store-லிருந்து Rangeen Machhli செயலியைப் பதிவிறக்கவும் செய்யலாம்:
https://play.google.com/store/apps/details?id=com.ornamentalfish.
மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களை நிரப்புவதன் மூலம் புதிய கணக்கை உருவாக்கிப் பயன்படுத்தலாம். பின்னர் சொந்த விருப்பப்படி மொழியைத் தேர்வு செய்யலாம்.
செயலி வெளியீட்டு நிகழ்வு:
12 செப்டம்பர் 2024 அன்று, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், புவனேஸ்வரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்-மத்திய நன்னீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் (ICAR-CIFA) "ரங்கீன் மச்லி கைபேசி செயலியை அறிமுகப்படுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள இணைப்பைப் பார்க்கவும்: https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=152145&ModuleId=3
***
PLM/AG/KR/DL
(Release ID: 2056398)
Visitor Counter : 34