வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
நவீன மின்-கழிப்பறைகள்: நாடு முழுவதும் நகர்ப்புற சுகாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன
Posted On:
18 SEP 2024 2:39PM by PIB Chennai
அதிநவீன தொழில்நுட்பத்துடன் இணைந்த புதுமையான தூய்மைத் தீர்வுகளின் மூலம், இந்தியாவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2014 அக்டோபர் 2 அன்று தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு தூய்மையான, பாதுகாப்பான, எளிதில் அணுகக்கூடிய பொது சுகாதார வசதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.
தூய்மை இந்தியா இயக்கம் பத்து ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், "தூய்மையே சேவை" இயக்கம் தனது ஏழாவது ஆண்டைக் கொண்டாடுகிறது. தொழில்நுட்பம் சார்ந்த, பயன்படுத்துபவர்களுக்கு உகந்த தூய்மைத் தீர்வுகள் மீதான கவனம் வேகம் பெற்றுள்ளது. இந்த பயணத்தின் முக்கிய முன்னேற்றங்களில் ஒன்றாக நவீன மின் கழிப்பறைகள் எனப்படும் ஸ்மார்ட் இ-கழிப்பறைகளின் எழுச்சி அமைந்துள்ளது. இது சுகாதார தரங்களை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல் நகர்ப்புறங்களில் பயனர் அனுபவத்தை உயர்த்தும் மேம்பட்ட அம்சங்களை வழங்குகிறது.
மகாராஷ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வாட் நகரம் முழுவதும் 26 இடங்களில் பொது-தனியார் கூட்டு (பிபிபி) மாதிரியின் மூலம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கழிப்பறைகள் நவீன வசதிகள், மின்னணு அமைப்புகளுடன் உள்ளன. அவை பராமரிப்பை எளிதாக்குகின்றன.
நாக்பூரில், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்துவமான இளஞ்சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் ஸ்மார்ட் இ-கழிப்பறைகள் உள்ளன.
இந்தியா முழுவதும், ஸ்மார்ட் மின்-கழிப்பறைகள் பொது சுகாதார சூழலை மறுவடிவமைத்து, சுகாதாரம், பாதுகாப்பு, வசதியை உறுதி செய்கின்றன.
***
PLM/AG/RR
(Release ID: 2056157)
Visitor Counter : 36