சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ் பாரத், 70 வயதிற்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்கள் அனைவரின் சுகாதாரப் பாதுகாப்பிற்கு வழி வகை செய்கிறது
Posted On:
12 SEP 2024 7:09PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை செப்டம்பர் 11, 2024 அன்று ஒப்புதல் அளித்தது. இதன்படி, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும் அவர்களின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் சுகாதார பாதுகாப்பைப் பெறுவார்கள்.
இந்த விரிவாக்கம் 6 கோடி மூத்த குடிமக்கள் உட்பட சுமார் 4.5 கோடி குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ .5 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீட்டுத் தொகையை வழங்குவதன் மூலம் பயனடைய உள்ளது.
முக்கிய அம்சங்கள்:
70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியான மூத்த குடிமக்கள் தனித்துவமான அட்டையைப் பெறுவார்கள்
ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களில் இருக்கும் மூத்த குடிமக்கள், ஆண்டுக்கு ரூ .5 லட்சம் வரை கூடுதல் சலுகையைப் பெறுவார்கள். இந்த சலுகை அவர்களுக்கானது, அவர்கள் அதை 70 வயதிற்குட்பட்ட மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை.
தற்போதுள்ள காப்பீட்டில் அங்கம் வகிக்காத மூத்த குடிமக்களுக்கு குடும்ப அடிப்படையில் ஆண்டுக்கு ரூ .5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும்.
மத்திய அரசு சுகாதாரத் திட்டம், முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் அல்லது ஆயுஷ்மான் மத்திய ஆயுத காவல் படை போன்ற பிற பொது சுகாதார காப்பீட்டுத் திட்டங்களிலிருந்து ஏற்கனவே பயனடைந்து வரும் மூத்த குடிமக்கள் தங்கள் தற்போதைய திட்டத்தைத் தொடரலாம் அல்லது ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தைத் தேர்வுசெய்யலாம்.
தனியார் சுகாதார காப்பீட்டு பாலிசிகள் அல்லது ஊழியர்களின் மாநில காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள மூத்த குடிமக்களும் திட்டத்தினால் பயனடையலாம்.
ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் என்பது உலகின் மிகப்பெரிய பொது நிதியளிக்கப்பட்ட சுகாதார உத்தரவாதத் திட்டமாகும். இத்திட்டம் இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ சிகிச்சைக்காக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டை வழங்குகிறது.
செப்டம்பர் 9, 2024 நிலவரப்படி, நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் 35.4 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் தற்போது தில்லி, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா தவிர 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்பாட்டில் உள்ளது.
செப்டம்பர் 9 வரை மொத்தம் 7.79 கோடி மருத்துவமனை சேர்க்கைகளுக்கு சுகாதார திட்டம் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2054275
BR/KR
***
(Release ID: 2054410)
Visitor Counter : 191