வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேக் இன் இந்தியா

உலகளாவிய உற்பத்தி ஆற்றல் மையமாக இந்தியாவை மாற்றுகிறது

Posted On: 10 SEP 2024 8:06PM by PIB Chennai

2014 செப்டம்பர் 25 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட மேக் இந்தியா முன் முயற்சி இந்தியாவின் தேசக்கட்டமைப்பு முயற்சிகளில் மிக முக்கியமான நடவடிக்கை ஆகும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக வீழ்ச்சி அடைந்திருந்த காலத்தில் இந்த முன் முயற்சி தொடங்கப்பட்டது.

இந்தியாவின் பொருளாதார பாதையை முன்னேற்றவும், பெருமளவிலான அதன் இளையோர் சக்திக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதில் இந்த முன் முயற்சி கவனம் செலுத்துகிறது.

மேக் இன் இந்தியா முன் முயற்சியில், பாதுகாப்பு, மருந்துகள், மருத்துவ சாதனங்கள், உயிரி தொழில்நுட்பம், ஜவுளி, ஆயத்த ஆடைகள், ரசாயனம், தோல் மற்றும் காலணிகள், உணவு பதப்படுத்துதல், மணிக்கற்கள், ஆபரணங்கள், கப்பல் போக்குவரத்து, ரயில்வே, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற உற்பத்தித்துறைகளும், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சேவைகள், போக்குவரத்து மற்றும் பொருள் போக்குவரத்து சேவைகள், ஒலி, ஒளி சேவைகள், சட்ட சேவைகள், நிதிச்சேவைகள், கல்விச் சேவைகள் போன்ற சேவைத் துறைகளும் இடம் பெற்றுள்ளன.

உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டங்கள், மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவித்துள்ளன. ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கீட்டுடன் இந்தத் திட்டங்கள், செல்பேசி தயாரிப்பு, மருத்துவ சாதனங்கள் உற்பத்தி, குளிர்சாதனப் பெட்டிகள், எல்இடி விளக்குகள், உணவுப் பொருட்கள், ஜவுளிப் பொருட்கள், சூரிய சக்தி மின்தகடுகள், ட்ரோன்கள் உள்ளிட்ட 14 உற்பத்தித்துறைகளில் செயல்படுத்தப்படுகின்றன.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நேரடி முதலீடும் அதிகரித்துள்ளது. 2014-15 நிதியாண்டில் 45.14 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த முதலீடு 2023-24-ல் 70.95 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.  இந்தத் திட்டத்தின் காரணமாக வணிகம் செய்வதை எளிதாக்குவதில் இந்தியாவின் தரவரிசை உலக வங்கி அறிக்கையின் படி முன்னேற்றம் கண்டுள்ளது. 2014-ம் ஆண்டில் 142-வது இடத்தில் இருந்த இந்தியா, 2019-ம் ஆண்டில் 63-வது இடத்திற்கு முன்னேறியது.

***

(Release ID: 2053553)

SMB/AG/KR

 


(Release ID: 2053718) Visitor Counter : 38


Read this release in: English , Urdu , Hindi