சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குரங்கம்மை நோய்க்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள்

Posted On: 10 SEP 2024 4:55PM by PIB Chennai

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் குரங்கம்மை நோய் பாதிப்பு  அதிகரித்ததால் சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக  உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. அமைப்பின் கூற்றுப்படி, ஜனவரி 2022 முதல் ஜூலை 31, 2024 வரை உலகளவில் மொத்தம் 1,03,048 குரங்கம்மை நோய் பாதிப்புகளும்,  229 இறப்புகளும் பதிவாகியுள்ளன. செப்டம்பர் 01, 2024 நிலவரப்படி, 15 ஆப்பிரிக்க நாடுகளில் 3,900 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கோ ஜனநாயக குடியரசு, புருண்டி மற்றும் நைஜீரியா ஆகிய மூன்று நாடுகள் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான  பாதிப்புகளை சந்தித்தன.

 

இந்தியாவில் பிரதமர் திரு  நரேந்திர மோடி தலைமையில் ஆகஸ்ட் 18, 2024 அன்று குரங்கம்மை மற்றும் அது தொடர்பான பொது சுகாதார நடவடிக்கைகளுக்கான இந்தியாவின் தயார்நிலையை மறுஆய்வு செய்ய உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. நோய்த்தொற்று பொதுவாக சுயமாகக் கட்டுப்படுத்தக்கூடியவை, 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும், நோயாளிகள் பொதுவாக ஆதரவான மருத்துவ பராமரிப்பு மற்றும் மேலாண்மை மூலம் குணமடைகிறார்கள் என்பது கூட்டத்தின் போது  தெரிவிக்கப்பட்டது.

 

ஆகஸ்ட் 2024 இல் ஏற்கனவே பல ஆயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:

ஆகஸ்ட் 12, 2024 அன்று, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்.சி.டி.சி) இந்தியாவுக்கான  குரங்கம்மை அபாயத்தை மதிப்பிடுவதற்கு நிபுணர்களின் கூட்டத்தை நடத்தியது.

என்.சி.டி.சி சமீபத்திய புதுப்பிப்புகளை இணைக்க குரங்கம்மை குறித்த அதன் முந்தைய தொற்று நோய் (சி.டி) எச்சரிக்கையை திருத்தியது.

சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் நுழைவு துறைமுகங்களில் உள்ள சுகாதார குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தற்போதைய நிலைமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலான சுகாதார அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட (ஐ.டி.எஸ்.பி) பிரிவுகள் உட்பட 200 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் சுகாதார சேவைகள்  தலைமை இயக்குநர் (டி.ஜி.எச்.எஸ்)  காணொலிக் காட்சி மூலம் மாநாட்டை நடத்தினார். மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் உடனடி கண்டறிதலின் அவசியத்தை மாநாடு வலியுறுத்தியது.

 

ஆகஸ்ட் 16, 2024 அன்று, சுகாதார சேவைகள்  தலைமை இயக்குநர் தலைமையில் கூட்டு கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் என்.சி.டி.சி, உலக சுகாதார அமைப்பு , இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பூச்சிகளால் பரவும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்திற்கான தேசிய மையம், சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம், மத்திய அரசு மருத்துவமனைகள் மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

 

பாதிப்புகளை உடனடியாகக் கண்டறிவதற்கான கண்காணிப்பை வலுப்படுத்தவும், பயனுள்ள நடவடிக்கைகளை செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. கூடுதலாக, ஆரம்பகால நோயறிதலை உறுதி செய்வதற்காக சோதனை ஆய்வகங்களின் வலையமைப்பை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும்குரங்கம்மை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான நெறிமுறைகள் பரவலாக பரப்பப்பட வேண்டும் என்று இந்தக் கூட்டங்களின் போது வலியுறுத்தப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053458

BR/KR

 

 

 

***


(Release ID: 2053639)