உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
சிவில் விமானப் போக்குவரத்து குறித்த ஆசிய பசிபிக் அமைச்சர்கள் அளவிலான 2-வது மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது
प्रविष्टि तिथि:
10 SEP 2024 4:45PM by PIB Chennai
இந்திய விமானப் போக்குவரத்துத் துறை, அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது, உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆற்றல்மிக்க சந்தைகளில் ஒன்றாக உருவாகியுள்ளது. 1911-ஆம் ஆண்டில் சிவில் விமானப் போக்குவரத்தின் தொடக்கத்திலிருந்து ஏர் இந்தியாவின் தனியார்மயமாக்கல் மற்றும் குறைந்த கட்டண விமானங்களின் அறிமுகம் வரை, இத்துறை குறிப்பிடத்தக்க மைல்கற்களை அனுபவித்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து குறித்த ஆசிய பசிபிக் அமைச்சர்கள் அளவிலான 2-வது மாநாட்டை இந்தியா நடத்துவதுடன், உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் புதுமை மற்றும் வளர்ச்சியில் நாடு முன்னணியில் உள்ளது. உடான் திட்டம் உட்பட அரசின் முன்முயற்சிகள் பிராந்திய இணைப்பை மறுவடிவமைத்து வருகின்றன, மேலும் விரைவான உள்கட்டமைப்பு விரிவாக்கம் முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியை உறுதியளிக்கிறது. பொருளாதார வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் முக்கிய உந்துதலாக விமானப் போக்குவரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்தியாவின் விமானப் போக்குவரத்து சூழல் ஒரு அற்புதமான எதிர்காலத்திற்குத் தயாராக உள்ளது, இது நிலைத்தன்மை, ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் குறிக்கப்படுகிறது.
சிவில் விமானப் போக்குவரத்து குறித்த ஆசிய பசிபிக் அமைச்சர்கள் அளவிலான 2-வது மாநாடு 2024 செப்டம்பர் 11 முதல் 12 வரை புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற உள்ளது.இந்த நிகழ்வை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு மற்றும் இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இணைந்து நடத்துகின்றன. ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் அமைச்சர்கள் அளவிலான முதலாவது மாநாடு 2018-இல் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்றது. முதல் மாநாட்டின் போது, 2020-இல் இரண்டாவது மாநாட்டை நடத்த இந்தியா தானாக முன்வந்தது, ஆனால் கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக, மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மண்டலத்தில் வாழும் மக்களின் பயணத் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதன் பின்னணியில் சிவில் விமானப் போக்குவரத்து குறித்த ஆசிய பசிபிக் அமைச்சர்கள் அளவிலான மாநாடு நடைபெறுகிறது. இந்தியா உலகில் வேகமாக வளர்ந்து வரும் விமான சந்தையாக உள்ளது, தற்போது உள்நாட்டுப் பிரிவில் 3-வது பெரிய சந்தியாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் விமானங்களின் எண்ணிக்கை 400-லிருந்து 800-ஆகவும், விமான நிலையங்கள் 74-லிருந்து 157-ஆகவும் அதிவேகமாக வளர்ந்துள்ளன. உடான் போன்ற அரசின் லட்சிய முயற்சிகள் பிராந்திய இணைப்பை மேம்படுத்தியுள்ளன, தொலைதூர பகுதிகள் கூட விமான இணைப்பில் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதிசெய்து, வளர்ச்சிக்கான வலுவான சூழலியலை உருவாக்குகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053456
BR/KR
***
(रिलीज़ आईडी: 2053626)
आगंतुक पटल : 111