தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரஷ்ய தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டம்

Posted On: 10 SEP 2024 6:28PM by PIB Chennai

ரஷ்யாவின் சோச்சி நகரில் 2024, செப்டம்பர் 9-10 தேதிகளில் ரஷ்ய தலைமையின் கீழ், நடைபெற்ற பிரிக்ஸ் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா கலந்து கொண்டார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் / தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரிக்ஸ் கூட்டாண்மையின் புதிய உறுப்பினர்களான எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றின் அமைச்சர்கள் / தூதுக்குழு தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

(i) அனைத்து மக்களுக்கும் தொழில் வழிகாட்டுதல், திறன் பயிற்சி மற்றும் வாழ்நாள் முழுவதும் தொழில்முறை கல்வி ஆகியவற்றை உருவாக்குதல், (ii) நடைமேடை வேலைவாய்ப்பு மற்றும் அதன் ஒழுங்குமுறைகளின் சவால்கள், (iii) தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழல் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்தல், (iv) பிரிக்ஸ் நாடுகளுக்கு சமூக ஆதரவை உருவாக்குதல் ஆகிய நான்கு முன்னுரிமை பிரச்சனைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதங்கள் நடைபெற்றன.

இந்திய இளைஞர்களுக்கான உள்ளகப் பயிற்சி வாய்ப்புகளுக்கான விரிவான திட்டம்,  பிரிக்ஸ் நாடுகளின் குடிமக்களுக்கான சமூகப் பாதுகாப்பு விவகாரத்தில், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் மற்றும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆகிய திட்டங்களின் காரணமாக முறையான தொழிலாளர் சக்திக்கு கொண்டு வரப்பட்ட வலிமை பற்றிய விளக்கம்,  குறைந்த செலவில் வீட்டுவசதிக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், திறன் மேம்பாட்டின் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டைகளின் கீழ், இந்தியா 347 மில்லியன் மக்களுக்கு பாதுகாப்பு அளித்திருப்பது, உலகின் மிகப்பெரிய அரசு நிதியளிக்கப்பட்ட சுகாதாரத் திட்டமாகவும் காட்சிப்படுத்தப்பட்டது.

கூட்டத்தின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடுகளில் ஒன்று, பிரிக்ஸ் நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்களின் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053505

 

***

LKS/RS/DL


(Release ID: 2053539) Visitor Counter : 62


Read this release in: English , Urdu , Hindi , Punjabi