சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (தென் பிராந்தியம் - சென்னை) புதிய துணைத்தலைமை இயக்குநராக திரு பிரவீன் கன்னா, பதவியேற்பு

Posted On: 04 SEP 2024 4:30PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (தென்  பிராந்தியம் - சென்னை) புதிய துணைத்தலைமை இயக்குநராக, திரு பிரவீன் கன்னா, பதவி ஏற்றுக் கொண்டார்.

தெற்கு பிராந்திய அலுவலகத்தின் அதிகார வரம்பு, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கோவா மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு  யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியதாகும்.

இந்திய தர நிர்ணய அமைவனத்தில், திரு பிரவீன் கன்னா , விஞ்ஞானி – ஜி ஆக,  தில்லி, மும்பை, சண்டிகர், ஜம்மு-காஷ்மீர்  மற்றும் ஃபரிதாபாத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

துணைத்தலைமை இயக்குநராக (தென் மண்டலம்) பொறுப்பேற்பதற்கு முன்பு, ஸ்ரீ பிரவீன் கன்னா, புதுதில்லியில் , வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் சான்றளிப்புத் திட்டப்பிரிவுக்கு தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

***

 


(Release ID: 2051772) Visitor Counter : 54


Read this release in: English