இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

பாரிஸ் 2024 பாராலிம்பிக்கில் ப்ரீத்தி பால் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்

Posted On: 02 SEP 2024 6:45PM by PIB Chennai

பாரிஸ் 2024 பாராலிம்பிக்கில் தனது அபாரமான செயல்திறனால் ப்ரீத்தி பால் பெண்களுக்கான டி35 பிரிவில், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டியில் தலா ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவரது சாதனைகள் அவரது வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறித்தது மட்டுமல்லாமல், ஒரே பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் தடகள வீரர் என்ற பெருமையையும் பெற்றார் . பாரிஸ் 2024-ல் ப்ரீத்தியின் வெற்றி அவரது இடைவிடாத உறுதிப்பாடு மற்றும் பல வருட கடின உழைப்பின் உச்சத்திற்கு ஒரு சான்றாகும்.

 

செப்டம்பர் 22, 2000 அன்று உத்தரபிரதேசத்தின் முசாபர் நகரில் பிறந்த ப்ரீத்தி பாலின் ஆரம்பகால வாழ்க்கை சிரமங்கள் நிறைந்ததாக இருந்தது. அவர் பிறந்த ஆறு நாட்களுக்குப் பிறகு, பலவீனமான கால்கள் மற்றும் ஒழுங்கற்ற தோரணை காரணமாக அவரது கீழ் உடல் செயலிழந்து காணப்பட்டது. இதனால் அவர் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார். தனது குழந்தை பருவம் முழுவதும், அவர் தனது கால்களை வலுப்படுத்த பாரம்பரிய சிகிச்சைகளை மேற்கொண்டார். ஐந்து வயதில், அவர் செயற்கை கால்களை பொருத்தி, அதை அவர் எட்டு ஆண்டுகள் அணிந்தார்.

 

17 வயதில், ப்ரீத்தியின் வாழ்க்கை குறித்த கண்ணோட்டம் மாறியது. தான் பார்த்த விளையாட்டு வீரர்களால் ஈர்க்கப்பட்ட அவர், தானும் விளையாட்டில் மகத்தான சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதை உணர்ந்தார். அவர் ஒரு உள்ளூர் அரங்கத்தில் பயிற்சி செய்யத் தொடங்கினார், இருப்பினும் நிதிக் கட்டுப்பாடுகள் அவருக்கு இடையூறாக அமைந்தது. பாராலிம்பிக் தடகள வீராங்கனை பாத்திமா காட்டூனை சந்தித்தபோது அவரது அதிர்ஷ்டம் மாறியது, அவர் அவரை பாரா தடகளத்திற்கு அறிமுகப்படுத்தினார். பாத்திமாவின் ஊக்கத்துடன், ப்ரீத்தி 2018 ஆம் ஆண்டில் மாநில பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டார், இது அவரது தடகள பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

 

முக்கிய அரசு தலையீடுகள் ப்ரீத்திக்கு சிறந்து விளங்க தேவையான வளங்களை வழங்கின. பயிற்சி மற்றும் போட்டிகளுக்கான நிதி உதவி, உயர்மட்ட வசதிகளுக்கான அணுகல் மற்றும் இலக்கு ஒலிம்பிக் மேடைத் திட்டம் (டாப்ஸ்) மற்றும் கேலோ இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் ஆதரவு ஆகியவை அவரது முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தன. எஸ்ஏஐ ஜே.எல்.என் ஸ்டேடியத்தில் பயிற்சியாளர் கஜேந்தர் சிங்கின் கீழ் பயிற்சி பெற டெல்லிக்குச் சென்றது ஒரு திருப்புமுனையாக அமைந்தது, ஏனெனில் அவர்கள் அவரது ஓட்ட நுட்பங்களைச் செம்மைப்படுத்தவும், அவரது செயல்திறனை உயர்த்தவும் ஒன்றிணைந்து பணியாற்றினர்.

 

ப்ரீத்தியின் அர்ப்பணிப்பு அவரை பல தேசிய நிகழ்வுகளில் போட்டியிட வழிவகுத்தது, மேலும் அவர் ஆசிய பாரா விளையாட்டு 2022 க்கு தகுதி பெற்றபோது அவரது கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் அவர் 4 வது இடத்தைப் பிடித்தாலும், அவரது உறுதி ஒருபோதும் அசைக்கப்படவில்லை. அவர் அதிக இலக்குகளில் தனது பார்வையை அமைத்தார், பாராலிம்பிக் விளையாட்டுகளை தனது இறுதி இலக்காக கவனம் செலுத்தினார். அவரது இடைவிடாத முயற்சிகள் 2024 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் குறிப்பிடத்தக்க செயல்திறனில் உச்சக்கட்டத்தை அடைந்தன, அங்கு அவர் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றார் . இந்த வெற்றிகள் அவரது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சிக்கு ஒரு சான்றாக இருந்தன, இது அவரை உலக அரங்கில் ஒரு வலிமையான போட்டியாளராக நிறுவியது.

 

பாரிஸ் 2024 பாராலிம்பிக்கில் ப்ரீத்தி பால் வரலாற்று வெற்றியைப் பெற்றார். வெறும் 23 வயதில், பெண்கள் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் டி 35 போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றார் , பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் தடகள வீராங்கனை என்ற வரலாற்றை உருவாக்கினார். அவரது வெற்றி இந்திய பாரா தடகளத்தில் ஒரு முன்னோடி வீரராக அவரது நிலையை உறுதிப்படுத்தியது.

 

***

(Release ID: 2050986)
PKV/RR/KR



(Release ID: 2051180) Visitor Counter : 21


Read this release in: English , Urdu , Hindi