சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்தியத் தர நிர்ணய அமைவனம், சென்னை, அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான “தரம் வழியாக அறிவியலைக் கற்றல்” என்ற இரண்டு நாள் பயிற்சித் திட்டத்தை வேலூரில் நடத்துகிறது.
Posted On:
29 AUG 2024 2:39PM by PIB Chennai
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
இந்தியத் தர நிர்ணய அமைவனம், சென்னைக் கிளை அலுவலகம், தற்போது தரநிலைக் கழகங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் அல்லது வழிகாட்டியாவதற்கு வாய்ப்புள்ள அறிவியல் ஆசிரியர்களுக்கு 29 மற்றும் 30 ஆகஸ்ட் 2024 அன்று ஹோட்டல் கன்னா பிஎஸ்ட்டா - வேலூரில் "தரநிலைகள் வழியாக அறிவியலைக் கற்றல்" என்ற தலைப்பில், இரண்டு நாள் பயிற்சியை நடத்துகிறது.
பங்கேற்பாளர்களை, பட்டதாரி பொறியாளர் ஸ்ரீ ஹரி வரவேற்றார். இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) தேசிய தரநிலைகளை உருவாக்குவதற்கும், பல்வேறு பங்குதாரர்களிடையே இந்த தரநிலைகளின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த நோக்கத்தைச் செயல்படுத்தும் வகையில், கல்வித்துறை ஒரு முக்கிய பங்குதாரராக அடையாளம் காணப்பட்டுள்ளது, ஏனெனில் கல்வி அமர்வுகள் முடிந்தவுடன், எதிர்காலத்தில் தரமான சுற்றுச்சூழல் அமைப்பில் மாணவர்கள் தடையின்றி சேர மாணவர்களுக்கு தரம் மற்றும் தரங்கள் பற்றிய அறிவு மிகவும் முக்கியமானது என்றார். மேலும் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தரநிலைகள் கிளப்களை உருவாக்குவது கல்வியாளர்களுடனான மிகவும் வெளிப்படையான செயல்களில் ஒன்றாகும் என்றும் திருமதி ஜி.பவானி கூறினார். மேலும், போட்டிகள் மூலம் மாணவர்கள் தங்கள் அறிவை மேம்படுத்துவதற்கான தரநிலைகளின் உலகத்தை ஆராய இந்த மன்றங்கள் ஒரு தளத்தை வழங்குகின்றன என்றும் "தரநிலைகள் வழியாக அறிவியலைக் கற்றல்" திட்டம் என்பது, தற்போது தரநிலைக் கழகங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் அல்லது வழிகாட்டிகளாக மாறக்கூடிய அறிவியல் ஆசிரியர்களுக்கானது என்றும் கூறினார்
திரு B J கெளதம், பிஐஎஸ் - சென்னை, நோக்கங்களை விளக்குகையில், "தரநிலைகள் வழியாக அறிவியலைக் கற்றல்" என்பது பிஐஎஸ்-ன் மற்றொரு முயற்சியாகும், இது தரம் மற்றும் தரநிலைகள் மூலம் மாணவர்களிடையே அறிவியல் அறிவு மற்றும் புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். மேலும் இந்த முன்முயற்சியின் கீழ், பிஐஎஸ் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இன்றைய தயாரிப்புகளோடு தொடர்புடைய அறிவியல் கொள்கைகளை விளக்கவும், விளக்கக் காட்சிகளின் தன்மை காரணமாக, இந்த பாடத்திட்டங்கள், வழக்கமாக கற்பிக்கப்படும் அறிவியல் பாடங்கள் பற்றிய விஞ்ஞான அறிவை கூடுதலாக வழங்குகின்றன என்றும் தெரிவித்தார்
தரப்படுத்தல், சான்றிதழ் திட்டங்கள், சோதனை, பயிற்சி மற்றும் தரநிலைகளை மேம்படுத்துதல் பிஐஎஸ் செயல்பாடுகள் பற்றிய சுருக்கமான விளக்கக்காட்சிகள் மூலம் இந்தப் பயிற்சி அளிக்கப்படும் என்றும், அதில் தரநிலைகள் கிளப் செயல்பாடுகள் குறித்து கல்வியாளர்களுடன் ஈடுபடுவதை மையமாகக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பங்கேற்பாளர்கள் பிஐஎஸ் இணையதளம், e-BIS, பிஐஎஸ் கேர் செயலி மற்றும் மானக் ராத் - ஆன்லைன் எக்ஸ்சேஞ்ச் ஃபோரம் - தரம், தரநிலைகள், 4 முதல் 5 வரையிலான பாடத் திட்டங்களில் விரிவான விளக்கக்காட்சிகள் தொடர்பான தகவல், அன்றாட வாழ்க்கையின் தயாரிப்புகள் மற்றும் தொடர்புடைய தரம் மற்றும் தரங்களுடனான எடுத்துக்காட்டுகள் ,அறிவியல் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் இந்த பயிற்சியில் விளக்கப்படும் என்றார் .
"தரநிலைகள் வழியாக அறிவியலைக் கற்றல்" என்னும் இந்த இரண்டு நாள் பயிற்சித் திட்டத்திற்கான பல்வேறு பயிற்சி அமர்வுகளை, திரு B J கெளதம், பிஐஎஸ், சென்னை & திரு A பாஸ்கர் ஆகியோர் நடத்துகின்றனர்.
நிகழ்ச்சியில் சுமார் 100 விஞ்ஞான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி நாளை 30.08.24 அன்று நிறைவடைகின்றது
***
MM/KR
(Release ID: 2049706)
Visitor Counter : 65