சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

இந்தியத் தர நிர்ணய அமைவனம் சென்னை, அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சித் திட்டத்தை புதுச்சேரியில் ஏற்பாடு செய்கிறது

Posted On: 21 AUG 2024 3:36PM by PIB Chennai

இந்தியத் தர நிர்ணய அமைவனம் , சென்னைக் கிளை அலுவலகம், தற்போது தரநிலைக் கழகங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் அல்லது வழிகாட்டியாவதற்கு வாய்ப்புள்ள அறிவியல் ஆசிரியர்களுக்கு 21 மற்றும் 22 ஆகஸ்ட் 2024 அன்று ஹோட்டல் ஆனந்தா இன், புதுச்சேரியில் "தரநிலைகள் வழியாக அறிவியலைக் கற்றல்" என்ற தலைப்பில் இரண்டு நாள் குடியிருப்புப் பயிற்சியை நடத்துகிறது. தொடக்க அமர்வு 21 ஆகஸ்ட் 2024 இன்று காலை, புதுச்சேரியில் நடைபெறுகிறது.

 

தரப்படுத்தல், சான்றிதழ் திட்டங்கள், சோதனை, பயிற்சி மற்றும் தரநிலைகளை மேம்படுத்துதல் பிஐஎஸ் செயல்பாடுகள் பற்றிய சுருக்கமான விளக்கக்காட்சிகள் மூலம் இந்தப் பயிற்சி அளிக்கப்படும். அதில் தரநிலைகள் கிளப் செயல்பாடுகள் குறித்து கல்வியாளர்களுடன் ஈடுபடுவதை மையமாகக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

 

"தரநிலைகள் வழியாக அறிவியலைக் கற்றல்" என்னும் இந்த இரண்டு நாள் பயிற்சித் திட்டத்திற்கான பல்வேறு பயிற்சி அமர்வுகளை விஞ்ஞானி திரு தினேஷ் ராஜகோபாலன்  நடத்துகிறார்

 

நிகழ்ச்சியில் சுமார் 60 விஞ்ஞான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி நாளை 22.08.24 அன்று நிறைவடைகின்றது.

***

 

 

 



(Release ID: 2047286) Visitor Counter : 42


Read this release in: English