சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

தொழில் முனைவோருக்கு தொழில் வாய்ப்பை வழங்குகிறது பிஎஸ்என்எல்

Posted On: 21 AUG 2024 12:33PM by PIB Chennai

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) கடலூர், விழுப்புரம் & செஞ்சி, மதுரை மேற்கு, திருச்செந்தூர், தூத்துக்குடி-1 மற்றும் வேலூர்-திருப்பத்தூர் பகுதியில் பிஎஸ்என்எல் மொபைல் சிம்கார்டுகள், ரீசார்ஜ்கூப்பன்கள் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளை விற்பனை செய்வதற்கான உரிமையாளராக புதிய வணிகக்கூட்டாளர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அரசின் "தற்சார்பு" முயற்சியைத்தொடர்ந்து, அரசுக்குச்சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் முதல் நாடுமுழுவதும் 4ஜி சேவைகளை வழங்கி வருகிறது. மாநிலத்தின் அனைத்துப்பகுதிகளிலும் பிஎஸ்என்எல் 4ஜி படிப்படியாக வழங்கப்படுவதால், தொழில்முனைவோர் பிஎஸ்என்எல்-லில் சிறு,குறு,நடுத்தர நிறுவனங்களில் உரிமையாளராகப் பதிவு செய்ய இது ஒரு நல்லவாய்ப்பாகும்.

தகுதியான வணிக ஆர்வலர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விழுப்புரம் & செஞ்சி, திருச்செந்தூர் மற்றும் வேலூர்-திருப்பத்தூர் பகுதிகளுக்கு, ஆர்வமுள்ள நிறுவனங்கள் குறைந்த பட்சம் டெலிகாம்/ எஃப்எம்சிஜி/ எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரிக்கல்  அல்லது நிறுவப்பட்ட சில்லறைச் சங்கிலிகளைக் கொண்ட பிற தயாரிப்புகளின் விநியோகஸ்தராக கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று வருட அனுபவத்துடன் ரூ. 50 லட்சம் விற்று முதலுடன் பங்கேற்கலாம். அதேசமயம், கடலூர், மதுரை மேற்கு, தூத்துக்குடி 1 பகுதிகளுக்கு, குறைந்த பட்சவிற்று முதல் மற்றும் அனுபவம் உள்ள ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு முறையே ரூ. 30 லட்சம் மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு வருட அனுபவம் ஆகும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 12, 2024 அன்று மதியம் 2 மணி ஆகும்.

மேலும் விவரங்களுக்கு, http://www.tamilnadu.bsnl.co.in/tenderlistCircle.aspx தளத்தைப் பார்க்கவும்.

***

 



(Release ID: 2047214) Visitor Counter : 121


Read this release in: English