சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சென்னை வருமான வரி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

Posted On: 15 AUG 2024 2:02PM by PIB Chennai

78வது சுதந்திர தின விழா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறையால், 2024, ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரத்தை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்பட்டது.

  சென்னை, வருமான வரித்துறை வளாகத்தில் நடந்த விழாவில், காலை 08.30 மணிக்கு வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் திரு. சுனில் மாத்தூர்,  தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.  ஓய்வு பெற்ற வருமான வரி முதன்மை தலைமை ஆணையர்கள், வருமான வரி தலைமை ஆணையர்கள், வருமான வரி மூத்த அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. சுனில் மாத்தூர் இந்த சுதந்திர திருநாளில், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து இந்த சுதந்திரத்தை நமக்குப் பெற்றுத் தந்த கோடிக்கணக்கான நமது முன்னோர்களுக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.  1857 முதல் சுதந்திரப் போருக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய வீரன் அழகுமுத்து கோன், ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள் நம்மோடு இருந்தனர்.  19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சுதந்திரப் போராட்ட வீரர்களான வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், வ.உ. சிதம்பரம் மற்றும் மகாகவி சுப்ரமணிய பாரதியார் போன்றோர் தங்கள்  செயல்பாடுகளாலும், தேசபக்திப் பாடல்களாலும், இளைஞர்களுக்கும் மற்றும் சாமானியர்களுக்கும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கும் உணர்வை எழுப்பினார்கள்.  இந்த நாளில் நமது எல்லைகளைப் பாதுகாப்பதற்கும், நம் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் இரவும் பகலும் உழைக்கும் நமது ராணுவ வீரர்களுக்கும்   மற்றும் காவல்துறையினருக்கும்  நாம் மதிப்பும் மரியாதையும்  அளிக்க வேண்டும்.

மேலும், நம் நாடு அந்நியர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்த நிலையில், நமது நாட்டிற்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்குவது அடுத்த பணியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.  இன்று நாம் பொருளாதாரத்தில் ஐந்தாவது நாடாகவும், உலகில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாகவும் இருக்கிறோம்.   2047 ஆம் ஆண்டுக்குள், நாம் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, வளர்ச்சியடைந்த தேசமாக இருக்க பிரதமர் இலக்கு நிர்ணயித்துள்ளார், மேலும் வரி நிர்வாகிகளாக நாம்  இந்த இலக்கை அடைய முக்கியப் பங்காற்றுவோம்.

விழாவின் ஒரு பகுதியாக வீணை வித்வான் ‘கலைமாமணி’ திரு. ராஜேஷ் வைத்யா, திருமதி. மாளவிகா ராஜேஷ் மற்றும் திரு. ஸ்ரீகாந்த் ஹரிஹரன் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.  இசை நிகழ்ச்சியில் திரு. ராஜேஷ் வைத்யா மற்றும் அவரின் குழுவினர், தேசபக்தி பாடல்களாலும் மற்றும் மனதை மயக்கும் இசையாலும் பார்வையாளர்களை கவர்ந்தனர்.

   

 

   

***

AD/PKV/KV



(Release ID: 2045588) Visitor Counter : 33


Read this release in: English