எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மின் உற்பத்தி திறன்

Posted On: 29 JUL 2024 4:08PM by PIB Chennai

நாட்டில் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க 2014-15 முதல் 2023-24 வரை  பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. 


2014 மார்ச் மாதம்  2,48,554 மெகாவாட்டாக இருந்த நிறுவுத் திறன் 2024 ஜூன் மாதம் 4,46,190 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி அடிப்படை யிலான மின் உற்பத்தி 2014  மார்ச்  முதல்  1,39,663 மெகா வாட்டிலிருந்து 2024 ஜூன் மாதத்தில் 2,10,969 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் திறன் 2014 மார்ச்  மாதம்  75,519 மெகாவாட்டிலிருந்து 2024 ஜூன்  மாதம்  1,95,013 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.


மின்சாரத்தை தொலையில உள்ள பகுதிகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய1,95,181 கிலோ மீட்டர் (சிகேஎம்) மின்சார பரிவர்த்தனை பாதைகள், 7,30,794 எம்விஏ மின்மாற்றித் திறன் மற்றும் 82,790 மெகாவாட்  மாநிலங்களுக்கு இடையிலான  திறன் ஆகியவை சேர்க்கப்பட்டு, 1,18,740 மெகாவாட் பரிமாற்றத் திறனுடன் முழு நாட்டையும் ஒரே அலைவரிசையில் இயங்கும் ஒரு கட்டமாக இணைக்கப்பட்டுள்ளது.  நாட்டின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு மின்சாரத்தை எடுத்துச்செல்லும் இந்தியாவின் மின்தொகுப்பு உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தொகுப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. முழு நாட்டையும் ஒரே தொகுப்பாக இணைப்பதன் மூலம் நாட்டை ஒரு ஒருங்கிணைந்த மின் சந்தையாக அரசு மாற்றியுள்ளது. விநியோக நிறுவனங்கள் நாட்டின் எந்த மூலையிலும் உள்ள எந்த மின் உற்பத்தியாளர்களிடமிருந்தும் மலிவான விலையில் மின்சாரத்தை வாங்கலாம், இதன் மூலம் நுகர்வோருக்கு மலிவான விலையில் மின்சார வழங்க முடியும்.


2031-32க்குள் புதைபடிவமற்ற எரிபொருள் அடிப்படையிலான  மின் உற்பத்தி திறனை 5,00,000 மெகாவாட்டாக அதிகரிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. 5,00,000 மெகாவாட்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை ஒருங்கிணைப் பதற்கான மின்மாற்றித் திட்டம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் கூட்டலுக்கு ஏற்ப படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது. 


இந்த தகவலை மத்திய மின்துறை இணை அமைச்சர் ஸ்ரீ ஸ்ரீபாத் நாயக் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

****



(Release ID: 2040429) Visitor Counter : 28


Read this release in: English , Hindi , Hindi_MP