அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பனிப்பிரதேசங்களில் நீண்டகாலம் பயன்படக்கூடிய பேட்டரி பயன்பாடு

Posted On: 31 JUL 2024 5:18PM by PIB Chennai

இமயமலைப் பிரதேசம் உள்ளிட்ட, பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவக்கூடிய தொலைதூரப்பகுதிகளில், வழக்கமான பேட்டரிகளுக்கு பதிலாக துத்தநாகம் மற்றும் காற்று கலக்கப்பட்ட பேட்டரிகள் பயன்படுத்தப்படுவதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது. நீண்டகாலம் பயன்படக்கூடிய கேத்தோடு வினையூக்கி மற்றும் உறைப்பனி எதிர்ப்பு எலக்ட்ரோலைட்டுகள் கலக்கப்பட்ட பேட்டரிகள் இப்பகுதிகளில் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகள், லித்தியம் கோபால்ட் ஆக்சைடு மற்றும் லித்தியம் அயன் பாஸ்பேட் போன்ற கனமான கேத்தோடு பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதால் இவை எடை அதிகம் உள்ள போதிலும் குறைவான எரிசக்தி திறன் கொண்டவையாக உள்ளன. எனவே தூய்மையான, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை பயன்படுத்தி அதிக எரிசக்தியை சேமிக்கும் திறன் கொண்ட பேட்டரிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

துர்காபூரில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் – மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் டாக்டர் அனிருத்தா குந்து தலைமையிலான குழுவினர் கோபால்ட் மற்றும் இரும்பு உலோக கலவையை ஒருங்கிணைத்து புதிய கேத்தோடு சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.  இதேபோன்று இரும்பு மற்றும் கார்பன் நுண்துகள்களை பயன்படுத்தி புதிய தொழில்நுட்பம் ஒன்றையும்  கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புதிய வகை கேத்தோடுகள் நீண்டகாலம் பயன்படக்கூடியவையாக உள்ளது என்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039699               

***

MM/AG/KR/DL


(Release ID: 2039838) Visitor Counter : 83


Read this release in: English , Hindi