கூட்டுறவு அமைச்சகம்
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஊக்குவிப்பு
Posted On:
31 JUL 2024 3:23PM by PIB Chennai
நாட்டில் புதிதாக 1100 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை ஏற்படுத்தும் பொறுப்பு தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள அவர், மத்திய நிதியுதவியுடன் 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை ஏற்படுத்தும் திட்டத்தின் கீழ், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்துவதன் வாயிலாக புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை ஏற்படுத்துவது ஊக்குவிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கும் ரூ 33 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுவதுடன், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை ஊக்குவிப்பதற்காக தொகுப்பு அடிப்படையிலான வர்த்தக அமைப்புக்கு, ஒரு உழுவர் உற்பத்தியாளர் அமைப்புக்கு ரூ. 25 லட்சம் வீதம் நிதியுதவி வழங்கப்படுவதாகவும் திரு அமித் ஷா கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039585
***
MM/AG/KR/DL
(Release ID: 2039815)
Visitor Counter : 37