இந்திய போட்டிகள் ஆணையம்
மங்களூர் கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தை பாரதீப் பாஸ்பேட்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைக்க சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
30 JUL 2024 6:45PM by PIB Chennai
மங்களூர் கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தை பாரதீப் பாஸ்பேட்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைக்கவும், மங்களூர் கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை ஜுவாரி மரோக் பாஸ்பேட்ஸ் பிரைவேட் லிமிடெட் கையகப்படுத்தவும் இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
பாரதீப் பாஸ்பேட்ஸ் லிமிடெட் (பிபிஎல்) என்பது அட்வென்ட்ஸ் குழும நிறுவனங்களின் கீழ் உள்ள ஒரு நிறுவனமாகும். பிபிஎல் முதன்மையாக சிக்கலான பாஸ்பேட் உரங்களின் உற்பத்தி, சந்தைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளது.
மங்களூர் கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (எம்சிஎஃப்எல்) என்பது அட்வென்ட்ஸ் குழுமத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனமாகும். எம்சிஎஃப்எல் முதன்மையாக சிக்கலான பாஸ்பேட் உரங்களின் உற்பத்தி, சந்தைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளது.
ஜுவாரி மரோக் பாஸ்பேட்ஸ் பிரைவேட் லிமிடெட் (ZMPPL) என்பது இசட்ஏசிஎல் -ஓசிபி இடையேயான 50:50 கூட்டு முயற்சியாகும். இசட்எம்பிபிஎல் தற்போது பிபிஎல்-லில் 56.08% ஈக்விட்டி பங்குகளைக் கொண்டுள்ளது. இசட்எம்பிபிஎல் உர வர்த்தகத்தை மேற்கொள்கிறது.
இணைப்பில் சிசிஐ-யின் விரிவான உத்தரவு பின்பற்றப்படும்.
***
(रिलीज़ आईडी: 2039391)
आगंतुक पटल : 95