அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

“நீடித்த வாழ்வாதாரத்திற்கு பாரம்பரிய அறிவு” என்பது குறித்த முதலாவது மாநாடு

Posted On: 29 JUL 2024 2:03PM by PIB Chennai

“நீடித்த வாழ்வாதாரத்திற்கு பாரம்பரிய அறிவு” என்பது குறித்த  முதலாவது அறிவியல், தொழில்நுட்ப, புதிய கண்டுபிடிப்பு மாநாடு இன்று (29.07.2024) புதுதில்லியில் தொடங்கியது. யுனெஸ்கோ ஆதரவுடன் வளரும் நாடுகளுக்கான  சர்வதேச அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு  மையமும், அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலும் (சிஎஸ்ஐஆர்) இணைந்து இந்த 3 நாள் மாநாட்டை நடத்துகின்றன.

சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என் கலைசெல்வி  இந்த மாநாட்டை தொடங்கிவைத்தார்.  ஐதராபாதில் உள்ள சிஎஸ்ஐஆர் இயக்குநர் டாக்டர் டி.சீனிவாச ரெட்டி,  புதுதில்லியில் உள்ள யுனெஸ்கோ இயற்கை அறிவியல் நிபுணர் டாக்டர் பென்னோ போயர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்துகொண்டனர். பெங்களூரூவில் உள்ள பலவகை துறைகளுக்கான பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், துணைவேந்தருமான பேராசிரியர் ஆனந்த் தர்ஷன் சங்கர் முக்கிய உரையாற்றினார்.

இந்த மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய டாக்டர் கலைசெல்வி, நீடிக்கவல்ல வாழ்க்கை சார்ந்த இந்த மாநாடு காலத்தின் தேவையாக உள்ளது என்று குறிப்பிட்டார். நமது முன்னோர்கள் நடைமுறைப்படுத்திய அறிவின் முக்கியத்துவம் பற்றியும், மதிப்பு பற்றியும், அடுத்த தலைமுறை இஞைர்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தும் தளமாக  இந்த மாநாடு அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். நவீனம் என்பது, எப்போதும் நமது பாரம்பரிய  அறிவுடன் தொடர்புடையதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பாரம்பரியத்தையும், நவீன அறிவியல் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்து கொண்டுவருவதன் முக்கியத்துவத்தை மிகச்சரியாக இந்த மாநாடு பரவலாக்குகிறது என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038392

***

SMB/RS/KR



(Release ID: 2038484) Visitor Counter : 17


Read this release in: Hindi , Hindi_MP , English