விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கரீப் பருவ பயிர் விதைப்பு 811 லட்சம் ஹெக்டேரைத் தாண்டியது

இடுகை இடப்பட்ட நாள்: 26 JUL 2024 5:46PM by PIB Chennai

வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் 26 ஜூலை 2024 நிலவரப்படி கரீப் பயிர்களின் பரப்பளவின் முன்னேற்றத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படிஇந்த ஆண்டில் கரீப் பருவத்தில் பயிர்கள் விதைப்பு 811 லட்சம் ஹெக்டேரை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 793.63 ஹெக்டேராக இருந்தது.

நெல் நடவு இந்த ஆண்டு இதுவரை 215.97 ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 216.39 ஹெக்டேராக இருந்தது. 

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 89.41 லட்சம் ஹெக்டேராக இருந்த பயறுவகை சாகுபடி இப்போது 102.03 லட்சம் ஹெக்டேர் ஆக அதிகரித்துள்ளது.

சிறுதானியங்கள் இந்த ஆண்டு சுமார் 153.10 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 145.76 லட்சம் ஹெக்டேராக இருந்தது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 165.37 லட்சம் ஹெக்டேராக இருந்த எண்ணெய் வித்துக்கள் சாகுபடி இந்த ஆண்டு 171.67 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
 

******

PLM/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2037927) வருகையாளர் எண்ணிக்கை : 63
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP , Manipuri