வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

அம்ருத் 2.0-ன்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

Posted On: 25 JUL 2024 5:45PM by PIB Chennai

நகர்ப்புற மாற்றம் மற்றும் புத்துயிரூட்டுதலுக்கான அடல் இயக்கம் (அம்ருத்) 2.0-ன்கீழ், திட்டங்களை செயல்படுத்துவதற்காக மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மத்திய அரசின் பங்காக ரூ.9,310 கோடி ஒதுக்கப்பட்டது.

அம்ருத் 2.0 விதிகளின்கீழ், நகர திட்டமிடல் பிரிவினரை பங்கெடுக்கச் செய்வதற்காக பட்ஜெட்டில் நிதிஒதுக்கீட்டிற்கு எந்த வழிவகையும் செய்யப்படவில்லை.

மாநில நிதி ஆணையத்துக்கு இல்லாமல், மாநிலங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியை விடுவிக்க 15-வது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

அம்ருத் 2.0 திட்டத்தின்கீழ், 50 ஆயிரம் முதல் 99,999 வரை மக்கள் தொகை கொண்ட இரண்டாம்தர 675 நகரங்களுக்கு பெருந்திட்டங்கள் அடிப்படையில் புவி தகவல் அமைப்பை உருவாக்கும் துணைத் திட்டத்துக்கு ரூ.631.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இது நாள் வரை, 18 மாநிலங்களுக்கு (550 நகரங்கள்) ரூ.76 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

அம்ருத் 2.0-ன் துணை திட்டமான புவி தகவல் அமைப்பு திட்டத்தின்கீழ், மாநில அரசுகள் தாங்கள் பெருந்திட்டங்களை தயாரிக்க விரும்பும் நகரங்களின் பெயர்களை மாநில உயர்மட்ட வழிகாட்டுதல் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்கும். இதில், ராஜ்கங்பூர், ரவகடா, சுனாபேடா, ஜோடா, கோராபுத், பர்லகேமுண்டி, சுந்தர்கர் ஆகிய நகரங்களை ஒடிசா மாநில அரசு சமர்ப்பித்துள்ளது. இதற்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் தகவல்களை மக்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு.டோக்கன் சாகு தெரிவித்துள்ளார்.

 

***



(Release ID: 2037306) Visitor Counter : 25