சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான உத்திகள்

Posted On: 25 JUL 2024 1:35PM by PIB Chennai

காற்று மாசுபாட்டை அளவீடு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.  பல்வேறு மானிட்டர்கள் மற்றும் தரவு மூலங்களிலிருந்து வரும் தரவு பிழை  நிச்சயமற்ற அளவைக் கொண்டிருக்கலாம். எனவே,மாசு அளவுக்கான நாடுகள்நகரங்களின் தரவரிசை பொருத்தமானதாக இருக்காது.

மக்கள்தொகை அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட மூன்று குழுக்களில் தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் உள்ள 131 நகரங்களின் தரவரிசையான தூய்மை வாயு சர்வேக்ஷன்  நிகழ்ச்சியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் நடத்துகிறது. என்.சி.ஏ.பி-யின் கீழ் காற்றின் தர மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்ததற்காக 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 47 நகரங்களின் குழுவில் டெல்லி 9-வது இடத்தைப் பிடித்துள்ளது.

சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம்  ஜனவரி 2019-ல் தேசிய தூய்மையான காற்று திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது காற்று மாசுபாட்டைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல், குறைத்தல் ஆகியவற்றிற்கான நீண்டகாலத்திற்கான தேசிய அளவிலான உத்தியாகும். என்சிஏபி திட்டத்தின் கீழ், 2017-ம் ஆண்டை அடிப்படையாக வைத்து 24 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 131 நகரங்களில் 2024-ம் ஆண்டுக்குள் துகள்களின் செறிவை 20 முதல் 30% வரை குறைப்பது என்ற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 2025-26-ம் ஆண்டுக்குள் 40% வரை குறைப்பு அல்லது தேசிய சுற்றுப்புற காற்று தரங்களை அடைய இலக்கு திருத்தப்பட்டது. காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான நகர செயல் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஆதரவாக நகரங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. அனைத்து 131 நகரங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் என்.சி.ஏ.பி.யின் கீழ் நகர செயல் திட்டங்களை தயாரித்துள்ளன.

என்சிஏபி திட்டத்தின் கீழ், 2019-20-ம் நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரை 131 நகரங்களுக்கு ரூ.19,614.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036732

-----

PKV/KPG/KR

 

 

***


(Release ID: 2036983) Visitor Counter : 70


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP