மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் 65 மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 24 JUL 2024 5:48PM by PIB Chennai

மாநில அரசுகளின் கோரிக்கைகளின் அடிப்படையில், மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பு நாடு முழுவதும் 65 மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களை  அமைத்துள்ளது. மேலும் 20 புதிய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களை  அமைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மின்னணு துறையில் முதலீட்டை ஈர்க்கும் வகையில், பல்வேறு வசதிகளுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கில், மின்னணு உற்பத்தி தொகுப்பு திட்டத்தை 2012 அக்டோபரில் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டது.

இத்திட்டத்தின் கீழ், 15 மாநிலங்களில் 19 பசுமை மின்னணு உற்பத்தி தொகுப்புகள், 3 பொது வசதி மையங்களை  அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப இணையமைச்சர் திரு ஜிதின் பிரசதா மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036443

----------------

IR/RS/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2036538) வருகையாளர் எண்ணிக்கை : 84
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP