சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதிய ரயில் சேவைகளை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்
प्रविष्टि तिथि:
19 JUL 2024 6:09PM by PIB Chennai
தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே புதிதாக வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில், இன்று (19.07.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இந்தப் புதிய ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதே போன்று கோயம்புத்தூர்- மேட்டுப்பாளையம் இடையேயான மெமு ரயில் போக்குவரத்தின், போத்தனூர் சந்திப்பு வரை நீட்டிக்கப்பட்ட சேவையையும் அமைச்சர் எல் முருகன் தொடங்கிவைத்தார். இதேபோன்று கோயம்புத்தூர்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சாமல்பட்டியில் புதிய நிறுத்தத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
இதுதவிர, மைசூர்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில், கடலூர் துறைமுகம் வரை நீட்டிப்பு, திருச்சிராப்பள்ளி- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலின் வாரம் 5 நாள் சேவையை தினசரி ரயிலாக அதிகரிக்கப்பட்ட சேவையையும், மேட்டுப்பாளையத்தில் இருந்து திரு எல் முருகன் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.
தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் புதிய ரயில் சேவையால் சுற்றுலா மற்றும் தொழில்துறையை ஊக்குவிப்பதுடன், பழனிக்கு புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் போக்குவரத்து இணைப்பு வசதியை வழங்கும். இதேபோன்று கோயம்புத்தூர்- மேட்டுப்பாளையம் மெமு ரயில்கள் போத்தனூர் சந்திப்பு வரை நீட்டிக்கப்பட்டிருப்பது, மாணவர்கள், வியாபாரிகள், தொழில்துறையினருக்கு உதவிகரமாக இருக்கும்.
கோவை-திருப்பதி ரயில் சாமல்பட்டியில் நிறுத்தப்படுவதால் சாமல்பட்டி சுற்றுவட்டாரப் பயணிகளுக்கு அதிக பயண வாய்ப்பை வழங்குகிறது.
மைசூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பது, துறைமுகத்திற்கு நேரடி இணைப்பு வசதியை ஏற்படுத்துவதுடன், உள்ளூர் பொருளாதார செயல்பாடுகள் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதாகவும் அமையும். குறிப்பாக முக்கிய ஆன்மீக தலமான சிதம்பரத்தை மைசூருடன் இணைப்பதாகவும் அமைந்துள்ளது.
மயிலாடுதுறை- திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ், தினசரி ரயிலாக மாற்றப்பட்டிருப்பது அலுவலக பணியாளர்கள், மாணவர்களுக்கு மேம்பட்ட போக்குவரத்து வசதியை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.


***
AD/MM/AG/DL
(रिलीज़ आईडी: 2034435)
आगंतुक पटल : 83
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English