அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மத்திய அறிவியில் தொழில்நுட்பத் துறைக்குட்பட்ட அறிவியல் தொழில்நுட்பத்திற்கான மேம்பட்ட ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில், தண்ணீரைப் பிரிப்பதற்கு நிக்கல் மற்றும் இரும்பாலான (NiFe) கலப்பு உலோகம் சிறந்தது என கண்டுபிடிப்பு

Posted On: 16 JUL 2024 4:15PM by PIB Chennai

தண்ணீரைப் பிரித்தெடுப்பதன் வாயிலாக ஆக்ஸிஜன் (02) உற்பத்தி  செய்வதற்கு, நிக்கல் மற்றும் இரும்பு ஆகிய இரு உலோகங்களைக் கொண்ட இரட்டை ஹைட்ராக்ஸைடு போதுமானது என,  சமீபத்திய  ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் அதிக முக்கியத்துவம் பெற்று வரும் காலகட்டத்தில்,  நீடித்த எரிசக்தி வளங்களுக்கான தேடுதலில், புதிய நம்பிக்கையாக தண்ணீர் பிரிப்பு உருவெடுத்துள்ளது. தண்ணீர் பிரித்தெடுத்தல், நீடித்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், பசுமை முறையில், தூய்மையான H2 மற்றும் 02 பெருமளவில் உற்பத்தி செய்ய வழிவகுக்கும் என தெரியவந்துள்ளது.

குவஹாத்தியில் உள்ள மத்திய அறிவியில் தொழில்நுட்பத்  துறைக்குட்பட்ட அறிவியல் தொழில்நுட்பத்திற்கான மேம்பட்ட ஆராய்ச்சி நிறுவனத்தில், நிக்கல் மற்றும் இரும்பு தவிர வேறு பல உலோகக் கலவைகளை பயன்படுத்தியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033659

*** 

MM/KPG/DL



(Release ID: 2033697) Visitor Counter : 25


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP