புவி அறிவியல் அமைச்சகம்
பிம்ஸ்டெக் நாடுகளுக்கிடையே அறிவியல் திறனில் பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில் உயர்மட்டப் பயிலரங்கை புவி அறிவியல் அமைச்சகம் நடத்துகிறது
प्रविष्टि तिथि:
15 JUL 2024 6:15PM by PIB Chennai
புவி அறிவியல் அமைச்சகத்தின் துணை அலுவலகமான நடுத்தர நிலை வானிலை முன்னறிவிப்புகளுக்கான தேசிய மையம் (NCMRWF), பிம்ஸ்டெக் நாடுகளுக்கான இரண்டு வார காலப் பயிலரங்கை நொய்டாவில் நடத்துகிறது. 2024 ஜூலை 15 முதல் 2024 ஜூலை 26-ம் தேதி வரை நடைபெறும் இதில் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளின் தேசிய நீரியல், வளிமண்டலவியல் சேவைகளின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்தப் பயிலரங்கை 2024 ஜூலை 15 அன்று புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு விஸ்வஜீத் சஹாய் தொடங்கி வைத்தார். தரவு ஒருங்கிணைப்பு, முன்கூட்டியகணிப்பு தொடர்பான நுட்பங்களில் திறன்களை மேம்படுத்துவதற்கும் அறிவைப் பகிர்வை ஊக்குவிப்பதற்கும் இந்தப் பயிலரங்கு உதவும்.
நடுத்தர நிலை வானிலை முன்னறிவிப்புகளுக்கான தேசிய மையத்தின் தலைவர் டாக்டர் வி.எஸ்.பிரசாத் தொடக்க அமர்வில் உரையாற்றினார். இந்த பிம்ஸ்டெக் பயிலரங்கில் கலந்துரையாடல் அமர்வுகள், தரவு ஒருங்கிணைப்பு தொடர்பான அமர்வுகள் நடைபெறுகின்றன.
Release ID: 2033445
PLM/KR
***
(रिलीज़ आईडी: 2033550)
आगंतुक पटल : 97