சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

வட்ட அளவிலான ஓய்வூதிய குறைதீர்க்கும் முகாம்-II, 2024

Posted On: 15 JUL 2024 2:58PM by PIB Chennai
வட்ட அளவிலான ஓய்வூதிய குறைதீர்க்கும்முகாம்- II 20.08.2024 (செவ்வாய்கிழமை) அன்று பகல் 11:00 மணியளவில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகளை முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம் சென்னை 600 002 என்கிற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ (அ) bgt.tn@indiapost.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ 02.08.2024 மதியம் 03:00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியுடன் பெறப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு காணொலிக் காட்சிக்கான இணைப்பு  உரிய நபர்களுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்படுகின்றது.

*** 

IR/RR



(Release ID: 2033312) Visitor Counter : 36