புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

2024 ஜூன் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் வெளியீடு

Posted On: 12 JUL 2024 5:30PM by PIB Chennai

2024 ஜூன் மாதத்திற்கான வருடாந்தர பணவீக்க விகிதம் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையில் 5.08% ஆக (தற்காலிகமானது) உள்ளது. இந்தப் பணவீக்க விகிதம் ஊரகப் பகுதிகளில் 5.66 சதவீதமாகவும், நகரப் பகுதிகளில்  4.39 சதவீதமாகவும் உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 1114 நகர்ப்புற சந்தைகள், அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 1181 கிராமங்களில் புள்ளியியல் அமைச்சகத்தின் களச் செயல்பாட்டுப் பிரிவின் பணியாளர்கள் மூலம் வாராந்திர அடிப்படையில் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. 2024 ஜூன்  மாதத்தில், தேசிய புள்ளியியல் நிறுவனம் 99.7% கிராமங்களிலும்  98.6% நகர்ப்புற சந்தைகளிலும் விலை விவரங்களை சேகரித்தது. அதே நேரத்தில் சந்தை வாரியான விலைகள் கிராமப்புறங்களுக்கு 88.9% மற்றும் நகர்ப்புறங்களுக்கு 93.0% ஆகவும் இருந்தன.

ஜூலை 2024 க்கான அடுத்த நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் வெளியீட்டு தேதி, 12 ஆகஸ்ட் 2024 (திங்கட்கிழமை) ஆகும். மேலும் விவரங்களுக்கு www.mospi.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

 *** 

PLM/KV



(Release ID: 2032985) Visitor Counter : 28