அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலும், எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
प्रविष्टि तिथि:
09 JUL 2024 8:15PM by PIB Chennai
கிராமப்புற, பழங்குடியின, வேளாண் சமூகங்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்குவதில் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்காக அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலும், எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என்.கலைசெல்வியும், எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் சௌமியா சுவாமிநாதனும் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய டாக்டர் கலைசெல்வி, சிஎஸ்ஐஆர் சோதனைக்கூடங்கள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி உரிய பயன்பாட்டாளர்களுக்கு வழங்கிவருகின்றன. குறிப்பாக, சமூகத்துறையில் பணியாற்றுவோருக்கு இவை பயன்படுகின்றன. இந்நிலையில், அடித்தள நிலையில் பணியாற்றும் எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை போன்ற அமைப்புகளுடன் கைகோர்ப்பதன் மூலம் இந்தப்பணிகளை விரிவுப்படுத்த முடியும் என்றார்.
எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் டாக்டர் செளமியா சுவாமிநாதன் பேசுகையில், இந்த அறக்கட்டளையின் முயற்சியால் பழங்குடியினர், ஏழை, எளிய சமூகத்தினர் ஆகியோருக்கு குறைந்த செலவில் ஆற்றல் மிக்க தொழில்நுட்பங்களை அளிக்க முடிகிறது. தற்போது எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம், புவிசார்ந்த இடம், தகவல்தொர்புக்கான மொழி, தேவைப்படும் ஆதார வளங்கள் ஆகிய காரணங்களால் சிஎஸ்ஐஆர் பரிசோதனை கூடங்களை நேரடியாக அணுக முடியாதவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்றார்.
***
(Release ID: 2031897)
SMB/RS/KR
(रिलीज़ आईडी: 2032126)
आगंतुक पटल : 106