சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

7-வது ஜி.எஸ்.டி தினத்தையொட்டி எம்எஸ்எம்இ-க்களுக்கான வர்த்தக கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது

Posted On: 10 JUL 2024 11:17AM by PIB Chennai

ஜிஎஸ்டி தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜிஎஸ்டி, மத்திய கலால் பிரிவின் சென்னை வெளி வட்டார ஆணையரகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது.

கூடுதல் ஆணையர் திரு.டி.ரஞ்சித் குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். கருத்தரங்கை முதன்மை ஆணையர் திரு. ஜே.எம்.கென்னடி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 100 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதன்மை ஆணையர் ஜி.எஸ்.டி தினத்தைக் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வருவாய் வசூல் மூலம் தேசக் கட்டமைப்புக்கு பெரும் பங்களித்து வருவதாக அவர் கூறினார். சென்னை வெளி வட்டார ஆணையரகத்தில் இயங்கும் ஜி.எஸ்.டி மையம் நாட்டிலேயே சிறந்த மையமாகத் திகழ்கிறது என்று அவர் பாராட்டினார்.

ஜி.எஸ்.டி வரிக்கான பதிவு செய்தல், கணக்குத் தாக்கல் செய்தல், பணத்தை திரும்பப் பெறுதல் ஆகியவை குறித்த விளக்கப்படம் காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது.

 

***

 

VL/PKV/RR/KR



(Release ID: 2031977) Visitor Counter : 39