சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

கரூர் மாவட்டம் தோகைமலை வட்டாரத்தில் சம்பூர்ணதா அபியான் திட்டம் தொடக்கம்

Posted On: 06 JUL 2024 8:24PM by PIB Chennai

கரூர் மாவட்டம் தோகைமலை வட்டாரத்தில் சம்பூர்ணதா அபியான் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டம் என்பது இந்தியாவில் உள்ள பின்தங்கிய வட்டாரங்களில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றி அமைக்கும் வகையில் 328 பின்தங்கிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் தமிழ்நாட்டில் 16 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் கரூர் மாவட்டத்தில் தோகைமலை வட்டாரமும் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தோகைமலை வட்டாரத்தில் முன்னேற்றத்தை நாடும் வட்டாரத் திட்டத்தின் கீழ் நித்தி ஆயோக் சார்பில் சம்பூர்ணதா அபியான் எனும் திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

சம்பூர்ணதா அபியான் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நித்தி ஆயோக்கின் தேசிய தகவல் மையத்தின் முதுநிலை இயக்குனர் எஸ் சுந்தரம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து மகளிர் திட்டம் மூலம் கடன் தொகைக்கான காசோலைகள் மற்றும் மண்வளப் பரிசோதனை அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டனஇதனையடுத்து நித்தி ஆயோக் முதுநிலை இயக்குனர் அங்கன்வாடி மையம் மற்றும் சமுதாய நல நிலையம் மற்றும் சுய உதவிக் குழுக்களின் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறைஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், வேளாண்மைத் துறை போன்றவற்றின் அதிகாரிகளும்  ஊராட்சித் தலைவர்கள், வட்டார அலுவலக பணியாளர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்..

 

  

 

   

 

   
 

***

AD/PLM/KV



(Release ID: 2031310) Visitor Counter : 67