சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

புதுச்சேரி என்ஐடியின் 3 துறைகள் சார்பாக 2 நாள் சர்வதேச கருத்தரங்கு இன்று தொடங்கியது

Posted On: 04 JUL 2024 12:04PM by PIB Chennai

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பு துறை மற்றும் கணினி அறிவியல் துறை ஆகிய மூன்று துறையின் சார்பாக “சமிக்ஞை செயலாக்கம், கணக்கீடு, மின்னணுவியல், ஆற்றல் மற்றும் தொலைத்தொடர்பு” என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கமானது கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கி. ரா அரங்கத்தில் இன்று காலை (04.07.2024) தொடங்கியது.

இக்கருத்தரங்கின் தொடக்க அமர்வு புதுச்சேரி என்ஐடியின் இயக்குநர் டாக்டர் மகரந்த் மாதாவ் கங்ரேகர், என்ஐடி பதிவாளர் டாக்டர் எஸ்.சுந்தர வரதன், மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, துணைத் தலைவர், முனைவர். சங்கர் வேணுகோபால், பேராசிரியர், மலேயா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர். ஜெயராஜ் செல்வராஜ், முனைவர். தலைவர், ஐஇஇஇ சென்னை பிரிவு, தலைவர் முனைவர். கே. பொற்குமாரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய முனைவர். சங்கர் வேணுகோபால் பல்துறை பொறியியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

 இக்கருத்தரங்கில் ஜோர்டானின் கிங் அப்துல்லா II ஸ்கூல் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியின் கெளரவப் பேராசிரியரான முனைவர். முகமது எஸ் ஒபைதாத், மலேசியாவின் தோட்டக் கலை கல்லூரியின் இணைப் பேராசிரியர் முனைவர். சிதி கைருன்னிசா பிந்தி பெஜோவும் சிறப்புரை ஆற்றினார்கள்.

இக்கருத்தரங்கில் இந்தியா முழுவதும் உள்ள சுமார் 150 அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்று தகவல் தொடர்பு, ஆண்டெனா மைக்ரோவேவ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் சமிக்ஞை செயலாக்கம், ஆற்றல் மாற்று அமைப்புகள், மின் ஆற்றல் அமைப்பு கட்டுப்பாடு மற்றும் சுய இயக்கம், தரவு கற்றல் மற்றும் தரவு கணக்கீடு ஆகிய தலைப்புகளில் தங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பாடுகள் பற்றி விவாதிக்கின்றனர். மேலும் இக்கருத்தரங்கில் உலகெங்கிலுமுள்ள பல ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொறியாளர்களால் இயற்றப்பட்ட144 ஆராய்ச்சி கட்டுரைகள் விவாதிக்கப்படவுள்ளன.

  

  

  

  

 

***

PKV/RR



(Release ID: 2030614) Visitor Counter : 38


Read this release in: English