சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு 2024.
Posted On:
01 JUL 2024 12:53PM by PIB Chennai
மத்திய பணியாளர் தேரவாணையத்தின் சார்பில் இம்மாதம் 1 முதல் 11-ம் தேதி வரை “ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு 2024” நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தென்மண்டலப் பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி, ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு-2024, கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. தென் மண்டலத்தில் 2,42,159 விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி & வேலூரிலும், புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசத்தில் குண்டூர், கர்நூல், ராஜமுந்திரி, திருப்பதி, விசாகப்பட்டினம், விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர், ஓங்கோல், விஜயநகரம், தெலங்கானாவில் ஐதராபாத், வாரங்கல், கரீம்நகர் ஆகிய 26 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 21 மையங்களில் நடைபெற உள்ளது.
தென்மண்டலத்தில் இத்தேர்வு 01.07.2024 முதல் 11.07.2024 வரை (சனி & ஞாயிறு தவிர) மொத்தம் 9 நாட்கள் நடைபெற உள்ளது. ஒரு நாளைக்கு 4 அமர்வுகள் - முதல் அமர்வு காலை 9 மணி முதல் 10 மணி வரை, 2-வது அமர்வு காலை 11.45 மணி முதல் 12.45 மணி வரையிலும் 3-வது அமர்வு பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரையிலும், 4-வது அமர்வு மாலை 5.15 மணி முதல் 6.15 மணி வரை நடைபெறும்.
தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்கள் முன்பாக இருந்தும், அதன் பிறகு அவர்களது தேர்வு நாள் வரை மட்டும் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளத்தக்க வகையில், எங்கள் வலைத்தளத்திலிருந்து மின்னணு – தேர்வு அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாகவும், ஆன்லைன் விண்ணப்பத்தில் தெரிவித்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது.
கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டுக்காகிதங்கள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்களை (செல்போன், ப்ளூடூத், ஹெட்போன், பேனா / பட்டன் ஹோல் / ஸ்பை கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், ஸ்டோரேஜ் சாதனங்கள் உள்ளிட்டவை) தேர்வு அறைக்குள் எடுத்து வர அனுமதிக்கப்பட மாட்டாது. அது போன்ற பொருட்கள் எதையும் தேர்வு அறைக்குள் விண்ணப்பதாரர்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்களது விண்ணப்பங்கள் ரத்து செய்ய நேரிடுவதுடன் சட்ட / குற்றவியல் ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் அடுத்து வரும் 3 – 7 ஆண்டுகள் வரை தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும். இதனால் விண்ணப்பதாரர்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பைகள் எதையும் தேர்வு நடைபெறும் இடத்திற்கு கொண்டுவரவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மின்னணுத் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு மற்றும் அசல் அடையாள ஆவணம் இன்றி வரும் விண்ணப்பதாரர்கள் யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது மின்னணுத் தேர்வுக்கூட அனுமதி சீட்டைத் தவறாமல் பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும். மேலும் விவரங்கள் / சந்தேகங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் தென்மண்டல அலுவலகத்தின் உதவி எண்கள் (தொலைபேசி- 044 – 2825 1139 & செல்பேசி: 94451 95946) வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம்.
------
SMB/IR/RS/RR
(Release ID: 2029926)