பாதுகாப்பு அமைச்சகம்
புனேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில், அடுத்த தலைமுறை வரிசைப்படுத்தும் வசதிகொண்ட அதிநவீன மரபணு வரிசைப்படுத்தும் பரிசோதனைக்கூடம் தொடங்கிவைக்கப்பட்டது
प्रविष्टि तिथि:
27 JUN 2024 3:16PM by PIB Chennai
புனேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் புதிய மரபணு வரிசைப்படுத்தும் பரிசோதனைக் கூடத்தை, ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவு தலைமை இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் தல்ஜித் சிங், 2024, ஜூன் 27 அன்று தொடங்கி வைத்தார். “Nextseq 2000” மற்றும் “Miniseq” எனப்படும் அடுத்த தலைமுறை வரிசைப்படுத்தும் வசதிகொண்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகள், இந்த புதிய பரிசோதனைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
பரம்பரை நோய்கள், புற்றுநோய், உறுப்பு மாற்று மருத்துவம் மற்றும் கருத்தரிப்பு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், அடுத்த தலைமுறை வரிசைப்படுத்தும் தொழில்நுட்பம், விரிவான பயன்பாட்டை வழங்குகிறது. இந்த மேம்பட்ட தொழில்நுட்பம் ராணுவ மருத்துவக் கல்லூரியின் திறமையை கணிசமாக மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2029004
***
MM/RS/KV
(रिलीज़ आईडी: 2029127)
आगंतुक पटल : 128