சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தரம் மற்றும் தரநிலைகள் குறித்த விநாடி-வினா போட்டியை 2024, ஜூன் 20 அன்று இந்தியத் தர நிர்ணய அமைவனம் நடத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 18 JUN 2024 5:12PM by PIB Chennai

குடிமக்களுக்கான இந்திய தரநிலைகள் பற்றிய அறிவு மற்றும் விழிப்புணர்வு குறித்து விநாடி-வினா போட்டியை இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) நடத்துகிறது. இந்த விநாடிவினா ஆன்லைன் வழியாக 2024, 20 ஜூன் அன்று காலை 09:00 - மாலை 05:00 மணி வரை நடத்தப்படுகிறது. விநாடி வினா ஆங்கிலத்தில் நடத்தப்படுகிறது. விநாடி வினா 120 நிமிடங்கள் (2 மணிநேரம்) இருக்கும். இதில் அதிகபட்சம் 15 கேள்விகளுக்கு பதிலளிக்கலாம்.

இந்த விநாடி வினாவில் இந்தியக் குடிமகனாக இருக்கும் எவரும் பங்கேற்கலாம். பரிசுகள் பின்வருமாறு:

1    பத்து - முதல் பரிசுகள் தலா ரூ. 25,000/-

2.    பத்து - இரண்டாம் பரிசுகள் தலா ரூ. 15,000/-

3.    நாற்பது - மூன்றாம் பரிசுகள் தலா ரூ. 10,000/-

4.    ஐம்பது - ஆறுதல் பரிசுகள் தலா ரூ. 5,000/-.

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்றதற்கான இ-சான்றிதழ் வழங்கப்படும்.

விநாடி வினாவில் கேட்கப்பட உள்ள கேள்விகள் பிஐஎஸ் வெளியிட்ட பல்வேறு இந்தியத் தரநிலைகள், பல்வேறு பிஐஎஸ் செயல்பாடுகள் மற்றும் தொடர்புடைய தகவல்கள், தரம், அறிவியல், முதலியன தொடர்பானவை.

பிஐஎஸ் பணியாளர்கள்/ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விநாடி வினாவை ஒழுங்கமைப்பதில் தொடர்புள்ள பணியாளர்கள் விநாடி வினாவில் பங்கேற்கத் தகுதியற்றவர்கள். இந்தத் தகுதியின்மை அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.

பிஐஎஸ் இணையதளமான www.bis.gov.in இல் வெற்றியாளர் அறிவிப்பு வெளியிட்ட பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு இந்தியத் தர நிர்ணய அமைவனம் பரிசுத் தொகை/ வெகுமதிகளை வழங்கும்.

விநாடி வினா தொடர்பான கூடுதல் விவரங்கள்/விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு, tnmd@bis.gov.in என்ற இணைய தளம்  அல்லது +91 120 2975686 என்ற தொலைபேசி எண்ணில்  தொடர்பு கொள்ளலாம்.

 

***

SRI/KV


(வெளியீட்டு அடையாள எண்: 2026209) வருகையாளர் எண்ணிக்கை : 120
இந்த வெளியீட்டை படிக்க: English