சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுச்சேரி பல்கலைக்கழகம் TIMES உலக தரவரிசை 2024 மற்றும் QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2025 இல் முன்னேற்றம் கண்டுள்ளது
Posted On:
18 JUN 2024 4:54PM by PIB Chennai
புதுச்சேரி பல்கலைக்கழகம் 106 நாடுகளில் உள்ள 5663 நிறுவனங்களின் பங்கேற்புடன், சமீபத்திய QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2025இல் உலகளவில் 1201-1400 க்கு இடையில் தரவரிசையை எட்டியுள்ளது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில், 46 மட்டுமே QS உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2025இல் இடம்பிடித்துள்ளன.
புதுச்சேரி பல்கலைக்கழகம் குறிப்பாக சர்வதேச ஆராய்ச்சி வலையமைப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான மேற்கோள்களில் சிறந்து விளங்குகிறது, அதே நேரத்தில் ஆசிரிய மாணவர் விகிதம், நிறுவன நற்பெயர், சர்வதேச ஆசிரியர், கல்வியின் தரம் ஆகியவற்றில் வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியது. அதுமட்டுமின்றி, நிலைத்தன்மை, வேலைவாய்ப்பு முடிவுகள் மற்றும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையில் சிறந்து விளங்கியுள்ளது. மேலும், 2024 QS நிலைத்தன்மை தரவரிசையில், புதுவை பல்கலைக்கழகம் உலகலாவிய அளவில் 801-820 இடத்தையும், இந்திய அளவில் 24ஆவது இடத்தையும் தரவரிசையைப் பெற்றது. 2025-க்கான தரவரிசையில் 24ஆவது இடத்தைவிட நல்லதொரு இடத்தை பிடிக்குமென பல்கலைக்கழகம் எதிர்பார்கிறது
புதுச்சேரி பல்கலைக்கழகம் டைம்ஸ் (TIMES) உயர் கல்வி தரவரிசை, QS ஆசிய பல்கலைக்கழக தரவரிசை, QS BRICS பல்கலைக்கழக தரவரிசை, தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) மற்றும் Outlook-ICARE தரவரிசை போன்ற பிற முக்கிய சர்வதேச தரவரிசைகளில் தீவிரமாக பங்கேற்கிறது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (i/c) பேராசிரியர் K. தரணிக்கரசு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் அவர்களின் அற்ப்பணிப்பு முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளைப் பாராட்டியதுடன், முழுப் பல்கலைக்கழக சமூகமும் புது உற்சாகத்துடனும், எதிர்வரும் ஆண்டுகளில் பல்கலைக்கழகத்தின் நிலையை மேலும் உயர்த்துவதற்கான முயற்சிகளுடனும் தொடர்ந்து பாடுபட ஊக்குவித்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழகம் TIMES உலக தரவரிசை 2024 இல் முன்னேற்றம் கண்டுள்ளது
உலக பல்கலைக்கழக தரவரிசையில் புகழ்பெற்ற TIMES உயர் கல்வி (THE), ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் (SDGs) அடிப்படையில் பல்கலைக்கழகங்களை மதிப்பீடு செய்து, அதன் 2024 தரவரிசைகளை சமீபத்தில் வெளியிட்டது.
இந்தப் பதிப்பானது, இந்தியாவிலிருந்து 64 உட்பட 120க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 2152 பல்கலைக்கழகங்கள் பங்கேற்றனர். புதுச்சேரி பல்கலைக்கழகம் அதன் தொடக்கத்திலிருந்தே இந்த தரவரிசை கட்டமைப்பில் தீவிரமாக ஈடுபட்டு, குறிப்பிடத்தக்க உலகளாவிய செல்வாக்கை அடைந்துள்ளது.
சமீபத்திய தரவரிசையில், எங்கள் பல்கலைக்கழகம் அதன் ஒட்டுமொத்த மதிப்பெண் 64.5 - 69.8 பெற்று, 601-800 Rank-ல் அடைந்தது.
இது கடந்த ஆண்டு 59.7 - 66.7 மதிப்பெண்ணை காட்டிலும் உயர்ந்துள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகம் மலிவு மற்றும் தூய்மையான ஆற்றல், குறைக்கப்பட்ட சமத்துவமின்மை, பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி மற்றும் காலநிலை நடவடிக்கை போன்ற SDG களில் சிறந்து விளங்குகிறது. கூடுதலாக, வறுமை இல்லாமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம் மற்றும் இலக்குகளுக்கான கூட்டாண்மை உள்ளிட்ட SDG களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
QS உலக பல்கலைக்கழக தரவரிசை, QS ஆசிய பல்கலைக்கழக தரவரிசை, QS நிலைத்தன்மை தரவரிசை, QS BRICS பல்கலைக்கழக தரவரிசை, டைம்ஸ் உயர் கல்வி தரவரிசை, தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) மற்றும் Outlook-ICARE தரவரிசை உள்ளிட்ட பல்வேறு மதிப்புமிக்க தரவரிசைகளில் புதுச்சேரி பல்கலைக்கழகம் தீவிரமாக பங்கேற்கிறது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (i/c) பேராசிரியர் K. தரணிக்கரசு, தனது மகிழ்ச்சியைத் தெரிவித்ததோடு, இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளை அவர் பாராட்டினார். எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய நிலைப்பாட்டை மேலும் மேம்படுத்துவதற்கான அவர்களின் உற்சாகத்தையும் கூட்டு முயற்சிகளையும் நிலைநிறுத்துவதற்கு ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகத்தையும் ஊக்குவித்தார்.

###
SRI/KV
(Release ID: 2026200)
Visitor Counter : 109