சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
நொதித்த பாலை அடிப்படையாகக் கொண்ட பானங்கள் குறித்த விவாதம்
Posted On:
06 JUN 2024 5:47PM by PIB Chennai
மதுரையில் உள்ள இந்திய தரநிர்ணய அமைவனம், 2024, ஜூன் 6 அன்று, நொதித்த பாலை அடிப்படையாகக் கொண்ட பானங்கள் பற்றிய கலந்துரையாடலை, மதுரையில் நடத்தியது. இதில் பல்வேறு பங்குதாரர்கள், உற்பத்தியாளர்கள், தொழிற் சங்கங்கள், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவன அதிகாரிகள், பல்வேறு ஆய்வகங்களின் பிரதிநிதிகள், மதுரை மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் இந்திய தர நிர்ணய அமைவன அலுவலகங்கள் மற்றும் ஆய்வகங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட 77 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நொதித்த பாலை அடிப்படையாகக் கொண்ட பானங்களின் ஊட்டச்சத்து மற்றும் சிகிச்சை பண்புகளின் முக்கியத்துவம் உலகளவில் விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது. இவை பல நாடுகளில் ஆரோக்கிய உணவாக பிரபலமாக உள்ளன. லஸ்ஸி, மோர் போன்ற பல பெயர்களில் நொதித்த பாலை அடிப்படையாகக் கொண்ட பல வகையான பானங்கள் சந்தையில் கிடைக்கின்றன. நொதித்த பாலை அடிப்படையாகக் கொண்ட பானங்களுக்கான தேவைகள் மற்றும் சோதனை முறைகளில் உற்பத்தியாளர்களுக்கு உதவ இந்த தரநிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மதுரையின் இந்திய தரநிர்ணய அமைவனத்தின் தலைவர் திரு சு. த. தயானந்த், வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார். நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் இந்திய தரநிலைகளில் அதன் பொருத்தம் பற்றிய விவரங்கள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு அவர் தெரிவித்தார்.
![](https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/BISphoto-2SAOM.jpeg)
![](https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/BISphoto-3XA4F.jpeg)
***
AD/IR/KPG/RR
(Release ID: 2023254)
Visitor Counter : 44