சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் வருடாந்தர தொழில்நுட்ப-கலாச்சார-விளையாட்டு விழா, 2024, மே 30 முதல் ஜூன் 2 வரை நடைபெறவுள்ளது
Posted On:
27 MAY 2024 2:57PM by PIB Chennai
சென்னை தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் வருடாந்தர தொழில்நுட்ப-கலாச்சார-விளையாட்டு விழா, 2024, மே 30 முதல் ஜூன் 2 வரை நடைபெறவுள்ளது. ‘பேரடக்ஸ் 24’ ( www.iitmparadox.org ) என பெயரிடப்பட்டுள்ள இந்த விழாவை சென்னை ஐஐடி பிஎஸ் பட்டப்படிப்பு – தரவு அறிவியல் மற்றும் புரோகிராமிங், மின்னணு முறைகள் சார்ந்த பட்டப்படிப்பு மாணவர்கள் நடத்தவுள்ளனர். இதில் பங்கேற்க சுமார் 27,000 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களால் நடத்தப்படும் அரங்குகள், 5 கி.மீ. ஓட்டப்பந்தயம், செயற்கை நுண்ணறிவு ஏஜன்ட் ஹேக்கத்தான் போன்ற நிகழ்வுகள் இதில் சிறப்பம்சங்களாக இருக்கும். இந்த நிகழ்வின் போது பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பையும், பணி அனுபவப் பயிற்சி வாய்ப்பையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பங்கேற்க சென்னை ஐஐடிக்கு வருகை தரவிருக்கும் மாணவர்களை வரவேற்பதாக கூறியுள்ள இதன் இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி, உலகம் முழுவதும் உள்ள பிஎஸ் பட்டப்படிப்பு மாணவர்கள் ஒருங்கிணைவதற்கும், அவர்களிடையே வலைப்பின்னலை உருவாக்குவதற்குமான தனித்துவ வாய்ப்பாக இந்த விழா அமைகிறது என்றும் தெரிவித்துள்ளார். “உங்களின் புதிய கண்டுபிடிப்பு, கற்றல், கொண்டாட்டம், வெற்றி என்ற அனுபவத்தை பெறுவதற்கு சென்னை ஐஐடிக்கு வருகை தரும் உங்களை நாங்கள் இன்முகத்துடன் வரவேற்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
“இந்த விழா முழுக்க முழுக்க மாணவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இது புதிய அனுபவங்களை தேடவும், கற்கவும் அவர்களுக்கு உதவும்” என்று சென்னை ஐஐடி பிஎஸ் (தரவு அறிவியல் மற்றும் பயன்பாடு) ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் தெரிவித்துள்ளார்.


***
SRI/SMB/AG/KR
(Release ID: 2021788)
Visitor Counter : 79