சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ரூர்க்கி ஐ.ஐ.டி மற்றும் உத்தராகண்ட் அரசின் கூட்டு முயற்சியில் பூகம்ப தயார்நிலையை மாற்றும் "பூதேவ்"
Posted On:
24 MAY 2024 12:57PM by PIB Chennai
• புதுமை மற்றும் பாதுகாப்பை இணைத்தல்
• பேரிடர் தயார்நிலைக்கான கூட்டாண்மையை உருவாக்குதல்
ரூர்க்கி இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி) மற்றும் உத்தராகண்ட் அரசு ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பாக, பூதேவ் என்ற அதிநவீன பூகம்ப முன்னெச்சரிக்கை செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி ரூர்க்கியின் முன்னணி நிபுணர்களால் உருவாக்கப்பட்ட இந்த செயலி, நில அதிர்வு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் உத்தராகண்ட் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் நெகிழ்வை உறுதி செய்வதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை பிரதிபலிக்கிறது.
"பூகம்ப பேரழிவு ஆரம்பகால விழிப்புணர்வு" என்று பொருத்தமாக பெயரிடப்பட்ட பூதேவ் செயலி,
உத்தராகண்ட் அரசு மற்றும் ரூர்க்கி ஐ.ஐ.டியின் கூட்டு முயற்சிகளால் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட புதுமையின் கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது. நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட அம்சங்களின் தொகுப்பின் மூலம், பூதேவ், பயனர்களுக்கு நிகழ்நேர பூகம்ப எச்சரிக்கைகளுடன் அதிகாரம் அளிக்கிறது, நில அதிர்வு நிகழ்வுகளை சரியான நேரத்தில் கையாள்வதை உறுதி செய்கிறது.
ஐ.ஐ.டி நிறுவனத்தின் மேம்பட்ட நில அதிர்வு உணரிகள் மற்றும் அதிநவீன தரவு பகுப்பாய்வு மூலம் இயக்கப்படும் பூதேவ், நிகழ்நேர பூகம்ப எச்சரிக்கைகளை பயனர்களின் திறன்பேசிகளுக்கு நேரடியாக வழங்குகிறது. மேலும், இந்த செயலியின் எஸ்.ஓ.எஸ் பொத்தான், உதவிக்கான உடனடி அணுகலை வழங்குகிறது. பயனர்கள் நம்பகமான தொடர்புகள் மற்றும் அதிகாரிகளுக்கு அவர்களின் துல்லியமான இருப்பிடத்தைப் பற்றி ஒரே அழுத்தத்தில் தெரிவிக்க இது வழிவகை செய்கிறது.
"விரைவான தொழில்நுட்ப முன்னேற்றத்தின் இந்த சகாப்தத்தில், பூதேவ், புதுமை மற்றும் ஒத்துழைப்பின் உச்சத்தை பிரதிபலிக்கிறது. உத்தராகண்ட் அரசுடனான எங்கள் கூட்டு முயற்சிகள் மூலம், நிகழ்நேர தகவல்களுடன் தனிநபர்களுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல், தயார்நிலை மற்றும் நெகிழ்வு கலாச்சாரத்தையும் வளர்க்கும் ஒரு கருவியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்”, என்று ரூர்க்கி ஐ.ஐ.டியின் இயக்குநர் பேராசிரியர் கே.கே.பந்த் தெரிவித்தார்.

***
SRI/BR/RR
(Release ID: 2021466)