பாதுகாப்பு அமைச்சகம்

146 வது என்.டி.ஏ பட்டமளிப்பு விழாவில் 205 வீரர்களுக்கு இளங்கலை பட்டங்கள் வழங்கப்பட்டன; நட்பு நாடுகளைச் சேர்ந்த 17 வீரர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன


ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே வீரர்களின் செயல்விளக்கக் காட்சியைப் பார்வையிட்டார்

Posted On: 23 MAY 2024 7:20PM by PIB Chennai

தேசிய பாதுகாப்பு அகாடமியின் 146 வது  பட்டமளிப்பு விழா 2024, மே 23  அன்று புனே தேசிய பாதுகாப்பு அகாடமியில் உள்ள ஹபிபுல்லா அரங்கில்  நடைபெற்றது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து மொத்தம் 205  வீரர்களுக்கு மதிப்புமிக்க இளங்கலைப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில்  சிறப்பு விருந்தினராக தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தரும், சிம்லாவில் உள்ள இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான (கூடுதல் பொறுப்பு) பேராசிரியர் (டாக்டர்) சத் பிரகாஷ் பன்சால் கலந்து கொண்டார்.

அறிவியல் பிரிவில் 82 மாணவர்களுக்கும், கணினி அறிவியல் பிரிவில் 84 மாணவர்களுக்கும், கலைப் பிரிவில் 39 மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டமளிப்பு விழாவில் நட்பு நாடுகளைச் சேர்ந்த 17 வீரர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக, கடற்படை மற்றும் விமானப்படையின்132 வீரர்களை உள்ளடக்கிய பி.டெக் பிரிவினரும்  'மூன்று ஆண்டு படிப்பு நிறைவு' சான்றிதழைப் பெற்றனர்ஏனெனில் இந்த கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு இந்தியக் கடற்படை அகாடமி, எழிமலாவிமானப்படை அகாடமி  ஹைதராபாத் ஆகியவற்றில் ஒரு வருட பயிற்சியை முடித்த பின்னரே பட்டம் வழங்கப்படும்

தலைமை விருந்தினர் தனது பட்டமளிப்பு விழா உரையில், உலகப் புகழ்பெற்ற முன்னணி பயிற்சி அகாடமிகளில் ஒன்றிலிருந்து கடினமான பயிற்சியை வெற்றிகரமாக முடித்துத் தேர்ச்சி பெற்ற வீரர்களை வாழ்த்தினார். இந்திய ராணுவத்தின்  இந்தப் பெருமைமிக்க 'முப்படைகள்' பயிற்சி நிறுவனத்தில் சேர தங்கள் குழந்தைகளை ஊக்குவித்த அனைத்துப் பெற்றோர்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

முன்னதாக, பயிற்சி நிறைவு அணிவகுப்புக்கு முன்னோட்டமாக, புனேயில் உள்ள தேசியப் பாதுகாப்பு அகாடமியின் பம்பாய் விளையாட்டரங்கில்  ராணுவப் பயிற்சியின் பல்வேறு அம்சங்கள் மூலம் பெறப்பட்ட திறன்களை வெளிப்படுத்தும் வீரர்களின் செயல்விளக்க நிகழ்ச்சி  நடத்தப்பட்டது. இதனை  ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பார்வையிட்டு சிறப்பித்தார்.

****

ANU/SRI/SMB/KV

 

 

 



(Release ID: 2021424) Visitor Counter : 43